"100 நாட் அவுட் " - வாழ்த்துக்கள் வசந்த் !!

Jun 18, 2009இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....படம் போட்டு கலக்கும், வார்த்தை விளையாட்டு 'வித்தகர்', தலைவர் 'பிரியமுடன் வசந்த்' அவர்கள் அடுத்து எழுதப்போவது 'அவருடைய நூறாவது பதிவு.... '

அன்னாரது பணி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்தும்,

அடியேன்,
'பொடியன்' செந்தில்...
பி.கு : ஸ்ஸப்பா.. முதல் முறையா 'சக்கரை' சுரேஷ்க்கு முன்னாடி ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லியாச்சு... !!


வருகிறேன் சென்னை !!

Jun 16, 2009


ருபத்தி இரண்டு மாதங்களாகிவிட்டது சென்னையை விட்டு இங்கு வந்து... (ங்கொய்யால எவ்ளோ நாளாகிப்போச்சு)

நட்புகள், உறவுகள், சுற்றித்திரிந்த தெருக்கள் (சைட் அடிச்ச ஃபிகர்கள விட்டுட்டியேன்னு மனசாட்சி எக்கோ குடுக்குது...), வாரந்தோறும் விளையாடிய 'சோமசுந்தரம் கிரவுண்டு', 'நெருங்கிப்'பழகிய தி.நகர் கடைகள் (யப்பா.. எம்பூட்டு கூட்டம்), சில்லென்ற கடற்கரை காற்று இவையனைத்தையும் துறந்து இங்கு வரவேண்டிய அலுவலக கட்டாயம்..

ஒருவழியாக வந்த வேலை இனிதே முடிவடைய (விடுவோமா, முடிச்சுட்டோம்ல!!), இந்த மாத இறுதியில் சென்னை திரும்ப முடிவாயிற்று !! ஆஹா... என்ன ஒரு நிறைவான உணர்வு அது (வெய்யிலுக்கு கும்முன்னு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி !!).. மீண்டும் 'நம்ம' ஊருக்கு திரும்பப்போகிறோம் என்கிற ஆனந்தம் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது.... கடந்த சில நாட்களாகவே வீட்டில் மனைவி 'இன்னும் பதினெட்டு நாட்கள் தான்.. இன்னும் பதினேழு நாட்கள் தான்' என்று (இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு குடுக்கற கவுன்ட்டவுன் மாதிரி) பூரித்துக்கொண்டிருக்கிறாள்..

மெரிக்கா - தொழில் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் (அதாங்க பர்சனல் லைப் - அத 'டேமில் '-ல சொல்ல தெரியலே.. :)) ) எனக்கு நன்றாகவே வாழ்வளித்தது.. மிகப்பெரிய பதவி உயர்வையும் தந்திருக்கிறது. ஆமாம், 'அப்பா' என்ற பதவி உயர்வு கிடைத்ததும் இந்த 22 மாதங்களுக்குள்ளாகத்தான். ஒப்பிட முடியாத, மட்டற்ற மகிழ்ச்சியை தந்த அனுபவம் அது !!

ஆக, ஜூன் 29 -ஆம் தேதியன்று, மிகுந்த மன நிறைவோடு அமெரிக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னையை நோக்கி எனது பயணத்தை தொடங்கப்போகிறேன்..

ருகிறேன் சென்னை, வாரி அணைக்கக் காத்திருக்கும் உறவுகளும் நட்புக்களுக்கும் எனது வாயார, மனமார நன்றிகளைக் கூறி விடுவேன்.... ஆனால், எனை ஓய்வின்றித் தாங்கி, பிரியா விடைகொடுத்தனுப்பிய தாய்மண்ணே, உனக்கெப்படி நன்றி சொல்வேன் ? உன்னுடன் மீண்டும் சேர ஓடோடி வருகிறேன். வருகிறேன் சென்னை... !!நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...

Jun 11, 2009

என்னடா இவன்.... ரஜினி, விஜய் & சூர்யா- வுக்கெல்லாம் திடீர்னு நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா... ??

இவங்கெல்லாம் எனக்கு தினமும் செய்யற உதவிக்கு 'நன்றி'ன்னு ஒரு வார்த்தைல நன்றிக்கடன செலுத்த முடியாது..

என் மகனோட வயசு இப்போ பத்து மாசம்.. சார் இப்போதான் முழுமூச்சா வீடெங்கும் தவழறதும், எதையாவது புடிச்சு எழுந்திருக்கரதுமா பிசியா இருக்காரு... அவர பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடி நானும் என் மனைவியும் ஒரு சில சுத்துக்கள் இளைச்சாச்சு.. :)

இப்படி அவரு வீட்ல சும்மா இருக்கும்போது செய்யற குரும்புகளே ஏராளம்.. அப்படி இருக்கையில இவனுக்கு சாப்பாடு குடுக்கரதுங்கறது ஒரு பெரிய சவாலாவே இருக்கும்... ஒரு சில நாட்களுக்கு முன்னாடி, youtube -ல தமிழ் கார்ட்டூன் பாட்டுக்கள் போட்டா அதை விரும்பி பாக்க ஆரம்பிச்சான்.. ஒரு எடத்துல அமைதியா கொஞ்ச நேரம் அவன உக்கார வெக்கணும்னா பாட்டு போட்டு விட்டா போதும்... அப்படியே ஒரு சாந்த சொரூபியா மாறிடுவான்....

இப்பெல்லாம் அவருக்கு சாப்பாடு குடுக்கறது ரொம்ப சுலபமாகிடுச்சு.. சிவாஜி, வாரணம் ஆயிரம், வில்லு -னு எந்த படத்துல இருந்து பாட்டு போட்டாலும், அதை ரசிச்சிக்கிட்டே சாப்டுடறான்...

'செய்நன்றி கொன்ற மகற்கு' உய்வில்லைன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரில்லையா ... அதான் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடலாம்னு இந்த பதிவு...

மீண்டும்... நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி & சூர்யா !!


மே 15 - 'சர்வதேச குடும்ப தினம்'

May 15, 2009


ஐக்கிய நாடுகள் சபையால் 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் மே 15 -ஆம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' -ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது..


குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

சர்வதேச குடும்ப தினத்தின் கருப் பொருட்கள்:

1996 - “Families: First Victims of Poverty and Homelessness”
1997 - “Building Families Based on Partnership”
1998 - “Families: Educators and Providers of Human Rights”
1999 - “Families for all ages”
2000 - “Families: Agents and Beneficiaries of Development”
2001 - “Families and Volunteers: Building Social Cohesion ”
2002 - “Families and Ageing: Opportunities and Challenges”
2003 - “Preparations for the observance of the Tenth Anniversary of the International Year of the Family in 2004″
2004 - “The Tenth Anniversary of the International Year of the Family: A Framework for Action”
2005 - “HIV/AIDS and Family Well-being”
2006 - “Changing Families: Challenges and Opportunities”
2007 - “Families and Persons with Disabilities”
2008 - “Fathers and Families: Responsibilities and Challenges”
2009 - “Mothers and Families: Challenges in a Changing World”

இந்த ஆண்டு , மாறிவரும் உலகத்தில் அன்னையர்களும் குடும்பங்களும் சந்திக்கும் சவால்களை கருவாகக்கொண்டு, அந்த சவால்களை எதிர் கொள்ளவும், அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண் கல்விக்கான அவசியம் குறித்த முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், ஒரு சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அன்னையர்களின் மகத்தான பங்கு இருப்பது உண்மை " என்றும் குறிப்பிட்டுள்ளனர் .

அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் 'சர்வதேச குடும்ப தின'த்திலும் அன்னையர்குளுக்கு முக்கயத்துவம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கும் முயற்ச்சியில் 'சண்முகா ஸ்டோர்ஸ்' !!

May 11, 2009


இந்த IPL-ல சரியா விளையாடாத ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை' வாங்கறதுக்கு "சண்முகா ஸ்டோர்ஸ்" குரூப் (அதாங்க.. நம்ம அண்ணாச்சியின் குழுமம்) முயற்சி செய்யப்போறதா நியூஸ் லீக் ஆகிருக்கு.. கீழ கொடுக்கப்பட்டிருக்கற நிபந்தனைகளுக்கு லலித் மோடியும் ஷாருக்கானும் ஒத்துக்கிட்டா இந்த டீல் முடிஞ்சிடுமாம்...

1. மொத்தல்ல இந்த 'ஜிகுஜிகு'-னு (கருப்பும் தங்க கலரும்) அடிக்கற கலர்ல இருக்கற டிரெஸ்ஸ மாத்தனும்.. நீல நிற சட்டையும் கருப்பு அல்லது பிரவுன் நிற பேண்டும் தான் போட்டு வெளையாடனும்... இந்த சீருடையும் (இதுக்கு உடை-னு சொல்லறதே ஓவர்... இதுல சீருடை...!!) சண்முகா ஸ்டோர்ஸ்-ல இருந்தே குடுத்துடுவோம்.. (அந்த மீட்டர் மூணே முக்கால் ரூவா காஸ்ட்லி துணில தச்சு..).... ஷூ , சாக்ஸ் எல்லாம் கொறஞ்ச விலைக்கு (Bata Showroom- இல் கிடைக்கறத விட குறைவா) சண்முகா ஸ்டோர்ஸ்லையே வாங்கிக்கலாம்..

2. இப்போ இருக்கற உலக பொருளாதாரத்த கருத்துல கொண்டு.. செலவுகள குறைக்கற முயற்சில...
  • ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ஹோட்டல் ரூம் புக் பண்றத நிறுத்திட்டு எல்லா வீரர்களும் ஒரே இடத்துல (நல்லா வசதியா !!) தங்கிக்கற மாதிரி கல்யாண மண்டபம் அல்லது எளிமண்டரி ஸ்கூல் க்லாஸ்ரூம் ஏற்பாடு செஞ்சு தரப்படும்... (சாப்பாடு பத்தி கவலைப்பட வேண்டாம்.. சண்முகா குரூப் காடேரிங்- -ல இருந்து உணவு வழங்கப்படும்...)
  • வெளையாடற கிரவண்டுக்கு போக வர சைக்கிள் வாங்கி (அல்லது வாடகைக்கு எடுத்து) கொடுக்கப்படும்.. உடற்பயிற்சியும் செஞ்ச மாதிரி ஆச்சு.. செலவும் குறையும்..

3. மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு ரெண்டு மணிநேரத்துக்கு மின்னாடியே எல்லா வீரர்களும் கிரவுண்டுக்கு வந்துடனும்.. வந்து சம்சா, வடை, போண்டா, பெப்சி, கோக், தண்ணி பாட்டில், இதெல்லாம் விக்கணும்.. ஒவ்வொருத்தரும் எவ்வளவு விக்கறாங்க-னு கணக்கு பாத்து அதன் அடிப்படையில சம்பளம் கொடுக்கப்படும்... (நெறியா விக்கறவங்களுக்கு கேப்டன் பதவி கூட போனஸ்-ஆ கொடுக்கப்படலாம்).


4. பாதுகாப்பு நடவடிக்கைகள கருத்துல கொண்டு, 'Z' பிரிவிலும் மேலான 'சண்முகா ஸ்டோர்ஸ்'-இன் செக்குரிட்டிகள் பணியமர்த்தப்படுவார்கள்.. லலித் மோடி விருப்பபட்டா கிரவுண்டுல இருக்கற மத்த செக்குரிடிகள எடுத்துட்டு இந்த செக்குரிட்டிகலயே பயன்படுத்திக்கலாம்..

கடைசியாக..

சரியா விளையாடாத வீரர்கள் தொடர் முடிஞ்ச பிறகு சென்னை-ல 'பிரம்மாண்டமாய்' இருக்கற 'சண்முகா ஸ்டோர்ஸ்'-ல ஒரு மாசம் வேலை செய்யணும்...

'Fake IPL Player' - Blog எழுதற வீரரும் யாருன்னு கண்டுபிடிச்சு , இந்த மாசம் முழுதும் ரங்கநாதன் தெரு கடையில வாசல்-ல கூட்டத்த கட்டுப்படுத்தற வேலை குடுக்கப்படும்..

டிஸ்கி : மேல சொல்லி இருக்கற எல்லா மேட்டரும் கற்பனையே (IPL, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லலித் மோடி, ஷாருக்கான் - தவிர) எந்த ஒரு நபரையோ 'குரூப்'-பயோ குறுப்பிட்டு சொல்லப்பட்டதல்ல.. சொல்லி இருக்கற விஷயம் யாரோடயாவது ஒத்துபோகுதுன்னா, அது ஏதேச்சையாக நடந்தது தான்.. அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.


கோபத்தின் உச்சியில் ரஜினி - சுவாரஸ்யமான தகவல் !

May 6, 2009


டிஸ்கி : சூப்பர்ஸ்டார் பற்றிய விஷயம் என்பதால் மேட்டேரை எழுதறதுக்கு முன்னாடியே டிஸ்கிய போட்டுடுறேன் ! இந்த தகவல் ரஜினி பற்றிய 'The Name is Rajinikanth' என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் கூறியுள்ளதன் தமிழ் மொழியாக்கம் மட்டுமே ! ஒரு ரஜினி ரசிகனான நான் இந்த பதிவை போடுவதன் நோக்கம் - இந்த சம்பவத்தை பகிர்ந்துகொள்ள மட்டுமே..


பல ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த ஒரு விழாவில் (சிவாஜி கணேசனின் 200-வது படமான திரிசூலத்தின் விழா என்று நினைக்கிறேன்.. இலங்கையின் 'Sakthi FM'- இல் கேட்ட ஞாபகம்) பங்கேற்றுவிட்டு தமிழ் சினிமா நட்ச்சத்திரங்கள் சென்னை திரும்புவதர்க்காக மதுரை விமானநிலையத்திற்கு வந்துள்ளனர்..

விமனான நிலையத்தில் இருந்த 'Duty Free Shop' -க்கு சென்ற ரஜினி குடிப்பதற்கு சோடா வேண்டுமென்று கேட்டுள்ளார்... ரஜினியை பார்த்து வாயடைத்துப்போன கடையில் இருந்தவருக்கு அவனது தலைவனை நேரில் பார்த்த சந்தோஷத்தில் அதிரடியாக கடை முழுவதும் தேடி இருக்கிறார் ஒரு சோடாவுக்காக.. கிடைக்கவில்லை என்ற சோகத்துடன் .. 'சாரி சார்.. சோடா ஸ்டாக் இல்ல'-ன்னு சொல்லி இருக்கார்.. வந்துதே ரஜினிக்கு கோபம்.. 'பளார்' என்று ஒரு அறை அறைந்துவிட்டு - ' என்ன தைரியம் சோடா இல்லை-னு சொல்லறே... எனக்கு வேண்டும் என்று தெரியாதா' என்று கேட்டிருக்கிறார்.. அதற்க்கு அந்த கடையில் இருந்தவர் 'என்ன சார் அதுக்காக அடிச்சுட்டீங்க' என்றிருக்கிறார், பல பேர் முன்னிலையில் அரை வாங்கிய அவமானத்தை தாங்கிக்கொண்டு..

'ஆமாம்..அறைந்தது மட்டும் பத்தாது' என்று சொல்லி தனது பெல்ட்-ஐ கழற்றி அடிக்க முற்பட்டிருக்கிறார்.. இதை எதிர்பார்காத அந்த நபர் கடையிலிருந்து வெளியே ஓடி இருக்கிறார் உதவிக்காக கத்தியபடி.. ரஜினியையும் அவரது கோபத்தையும் பின்னர் கட்டுப்படுத்த நம்பியார் மிகுந்த பொறுமையுடன் முயற்சி செய்திருக்கிறார்.. ரஜினியின் கோபம் கட்டுக்கடங்காமல் இருந்திருக்கிறது.. அங்கிருந்த அப்பாவி உதவியாளர்கள் சிலரும் அந்த கோபத்திர்க்கு இரையாகி உதைவாங்கி இருக்கிறார்கள்... தன்னருகில் வந்து சமாதனம் சொல்ல நினைத்த சிலரையும் பொரிந்து தள்ளி இருக்கிறார் ரஜினி..

இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு மூத்த விமான பெண் விமான ஊழியர்... 'I am sorry, we cannot take a mentally disturbed person on board' என்று கூறி விமானத்தின் உள்ளே நுழைய ரஜினியை அனுமதிக்கவில்லை... உடனே நம்பியார் 'இல்லை இல்லை.... அப்படியெல்லாம் ஒன்றுமில்லை... அதிகமான வேலைப்பளு (over work) காரணமாகத்தான் அவர் அப்படி நடந்து கொண்டார்' என்று கூறி இருக்கார்.. மற்ற சில சினிமா நட்ச்சத்திரங்களும் எடுத்துக்கூறி இருக்கின்றனர்.. அதன் பின் சிறிய தயக்கத்துடன்... அந்த பெண் விமான ஊழியர்..' அப்படியென்றால் இந்த form-இல் விமானத்தில் அவரது நடத்தைக்கு நீங்கள் பொறுப்பு என்று கையெழுத்திட்டுக்கொடுங்கள்..அனுமதிக்கிறோம்' என்று கூறியிருக்கிறார்... பின்னர் நம்பியாரும், சிவக்குமாரும் கையெழுத்திட்டு கொடுத்த பின்னர் ரஜினியுடன் அந்த விமானம் கிளம்பியது..

காட்பரி எக்ளைர்ஸ்- இன் புதிய விளம்பரம்

May 5, 2009

இன்னிக்கு சன் டிவி பாத்துகிட்டு இருக்கும்போது 'Cadbury Eclairs' -ஓட புது ad போட்டாங்க...
(யாராவது வீடியோ லிங்க் upload பண்ணி இருக்காங்களான்னு தேடிப்பாத்தேன் ... கெடைக்கலே..)

அந்த விளம்பரம்...

வாயோட ஓரத்துல பட்டாசு திரி மாதிரி எரியுது.. இது மாதிரி ஒரு நாலஞ்சு பேரோட வாயுல அது எரியறதே காட்டறாங்க.. அப்புறம் அது வெடிக்குது... தலை அப்படியே வெடிச்சு சாக்லேட்-ஆ செதருது...
விளம்பர யுக்தி-ல creative/innovative -ஆ யோசிக்கரதுங்கறது ஞாயம் தான்.. அதுக்காக இப்படியா... புதுமையா இருந்தாலும் அத பாக்கும்போது ஒரு விதமான அருவருப்பு / அதிர்ச்சி வரத்தானே செய்யுது.. பெரியவங்கள விடுங்க.. வீட்ல குட்டீஸ் டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் வந்தா... பாக்கற அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?
பார்க்கறவங்கள கவரனும்கறதுக்காக இப்படி ஒரு முயற்சி தேவையா ? Vodafone -ஓட சமீபத்திய விளம்பரம் (வெள்ளை நேரத்துல ஒரு ஜீவன் வருமே...) கூட தான் வித்யாசமா இருக்கு... ஆனா அத பாத்து ரசிக்க முடியுது...
விளம்பர படம் எடுக்கறவங்க கொஞ்சம் யோசிச்சு.. ஆங்கிலத்துல 'Target audiance' -னு சொல்லுவாங்களே... அப்படி, அத யாரெல்லாம் பாக்கறாங்க-னு சிந்திச்சு பண்ணினா நல்லா இருக்கும்...


டிஸ்கி : இது என்னோட கருத்து ... அவ்ளோ தான்.. சில பேருக்கு இந்த விளம்பரம் பிடிச்சிருக்கலாம்... அவங்களோட என்னத்த / விருப்பத்த குறை சொல்ல அல்ல..மீண்டு(ம்) வருகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ் ?

May 4, 2009


இன்னிக்கு (04-May) ஆட்டத்தில இருந்த வேகம், எடுத்த முடிவுகள், அதுக்கு கெடைச்ச வெற்றி - எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா.. 'வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ' வர்ற மாதிரியே தெரியுது.. பொறுத்திருந்து பாப்போம், இன்னும் நெறையா ஆட்டங்கள் பாக்கி இருக்கு... நம்ம பசங்க என்ன செய்ய போறாங்கன்னு பாக்கலாம்...

சென்னை அணியோட (தற்போதைய) பலங்கள் -

1. நல்ல பார்ம்-ல இருக்கற பேட்ஸ்மென்கள் -
  • ஹய்டேன் .. தல பட்டய கெளப்பிகிட்டு இருக்கு.. தொடர்ந்து கெளப்புமா ??
  • ரெய்னா .. இள ரத்தம் .. ஒரே சிக்ஸர் , போர்னு தான் வேலாசிகிட்டு இருக்காரு.. அதிரடி தொடர்ந்தா அருமை..
  • பத்ரி & விஜய் .. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் !! நிதானமா தெரிஞ்சாலும், consistent -ஆ ரன் அடிச்சா போதும்!!..
  • தோனி.. ஒரு வழியா அதிரடி ஆட்டம் மறுபடியும் கொஞ்சம் 'தல' காட்டுது.. இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டினா.. பழைய தோனியா வரணும் (சத்ரியன் ஸ்டைல்-ல!)

2. எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலர்கள் -

  • பாலாஜி - தங்கத்தமிழன்.. இப்போ வரைக்கும் (இன்னிக்கித்த மேட்ச் தவிர !) நல்லா தான் வீசிக்கிட்டு இருக்காரு.. அய்யா.. போன வருஷம் IPL final ஞாபகத்துல வெச்சுகிட்டு பந்து வீசினா சரி...
  • முரளி.. அட்டகாசம்.. அருமை.. வேற என்ன சொல்ல..
  • ஜகதி / தியாகி .. புதிய கண்டுபிடிப்புகள்.. underdogs -னு சொல்லலாம்.. யாரும் எதிர்பாக்களை இவ்ளோ நல்லா விளையாடுவாங்கன்னு .. சபாஷ்... தொடரட்டும் !!
  • மோர்க்கேல் / ஜாகோப் ஓரம் - ரெண்டு பேரும் திறமைசாலிகள்தான் .. இன்னும் நல்லா வெளையாடலாம்..

இப்போ points table-ல 9 points எடுத்து முதல் எடத்துல இருந்தாலும்.. இது நாளைக்கு வரைக்கும் தான்.. பஞ்சாப் , டெல்லி & ராஜஸ்தான் அணிகள் நாளைக்கு ஆட்டத்தோட முடிவுல புள்ளிகள் அதிகமாகி மேல வரலாம்.. மும்பை அணி புதன்கிழமை ஆட்டத்துல ஜெயிச்சா அவுங்களும் மேல வந்துடுவாங்க...

ஆகமொத்தம் ... தொடர்ந்து நல்லா விளையாடினா மட்டும் தான் சென்னை தன்னோட எடத்த தக்க வெச்சுக்க முடியும்...

நல்லா விளையாடுமா ? ஹய்டேன், ரெய்னா, தோனி, முரளி, பாலாஜி, இவங்களோட இப்போ நல்லா விளையாடிட்டு இருக்கற ஜகதி, தியாகி, பத்ரி & விஜய் எல்லாரும் தோள் குடுத்தா ... வெற்றி நிச்சயம் !! (ஹ்ம்ம்.. சொல்லறதுக்கு நல்லாத்தான் இருக்கு... செய்வாங்களா??)


விண்டோஸ் - பயனுள்ள 'ரன் கமாண்ட்ஸ்' (Run Commands) - பாகம் 1

May 3, 2009

விண்டோஸ்-இல இருக்கற 'Run'-ங்கற ஆப்ஷன் பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்-னு நெனைக்கறேன்.. (Start Menu -> Run மூலமாகவோ அல்லது Windows Key-உடன் 'R' பட்டனை அழுத்தலாம்)
இந்த 'ரன்' மூலமா ஒரு சில விஷயங்கள வேகமா செய்ய முடியும்ங்கறது தான் அந்த வசதியோட சிறப்பு.
நான் சமீபத்துல தெரிஞ்சிக்கிட்ட விஷயத்த சொல்லறேன்... நான் தெரிஞ்சுக்கிட்ட 'On Screen Keyboard' -ங்கற (சுருக்கமாக OSK) விஷயத்த பகிர்ந்துக்கறேன்..
வீட்ல கம்ப்யூட்டர்-ல கொஞ்சம் தள்ளி உக்காந்துகிட்டு எதாவது DVD அல்லது Internet TV பாத்துக்கிட்டு இருப்பேன்.. Wireless Mouse வேச்சிருக்கறதாலே சேனல் மாத்தறது மாதிரி (type பண்ண தேவை இல்லாத) வேலைகள தூரத்துல இருந்தே செஞ்சுக்கலாம்.. ஆனா அந்த சமயத்துல எதாவது டைப் பண்ணனும்னா (Web page address / password..etc) மறுபடியும் எழுந்து கம்ப்யூட்டர்-க்கு போயிட்டு தான் டைப் பண்ணனும்.. (அதுக்கு சோம்பேரித்தனமா இருக்கும் தான் !!) நேத்திக்கு தான் இந்த OSK -வை பயன்படுத்தலாம்-ங்கற யோசனை வந்துச்சு...
வழிகள் இதோ...
1. Run விண்டோ-வில் 'OSK' என்று டைப் செஞ்சா (கீழே இருப்பது போல ..)

இந்த மாதிரி ஒரு விண்டோ-ல (கீழே இருப்பது போல ..) ஒரு கீபோர்டு வரும்.. இந்த கீபோர்டை எந்த application-ல வேணும்னாலும் டைப் பண்ணலாம்...
2. Desktop-ல இந்த OSK-க்கு ஒரு shortcut செஞ்சு வெச்சுக்கலாம்... இது மேல சொன்னத விட சிறந்த வழி...

அவ்ளோதான் ... இனிமேல் நீங்க உங்க wireless mouse-ஐ மட்டும் வெச்சுகிட்டு எங்கிருந்து வேணாலும் டைப் பண்ணலாம்..

பி.கு: Wireless Mouse வாங்கத்தெரிஞ்ச புத்திசாலிக்கு ஒரு Wireless Keyboard வாங்க முடியலையோ-னு ஒரு சிலர் கேக்கறது புரியுது.. எங்க வீட்ல குடுத்த பட்ஜெட்-கு அத மட்டும் தான் வாங்க முடிஞ்சுது.. அதனாலதான் இப்படி குறுக்கு வழிகள் கண்டு புடிக்க வேண்டிய கட்டாயம் :)பச்சன் (அமிதாப்) குடும்பத்தின் அசத்தல் (??!!) போஸ் !!

May 1, 2009

சில சமயங்களில் பிரபலங்கள் போட்டோவுக்கு குடுக்கும் போஸ் ஆச்சர்யத்தை வரவழைக்கும்.. கீழே உள்ள படத்தை பாருங்கள் !!


குடும்ப சகிதமாக இவர்கள் குடுத்த இந்த போஸ் 'Hindu' நாளிதழில் வெளியாகி இருக்கிறது.. தேர்தலில் "வோட்டு போட்டுட்டோம்"-ங்கறத தான் அவ்ளோ அழகா போஸ் குடுக்கறாங்கலாம் :))

மகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் !

Apr 30, 2009

இந்த ஆண்டின் IPL -இல் தோனி எடுக்கும் ஒரு சில முடிவுகள் / முயற்சிகள் சற்றே தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது !

சென்னை சூப்பர் கிங்க்ஸ்-இன் முதல் போட்டியில் தமிழகத்தின் இளம் வீரர் 'ரவிச்சந்த்ரா அஷ்வின்' டீம்-இல் இருந்தார்.. [ இந்திய அணிக்காக கண்டறியப்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களில் (Future Probables) இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ]. அணியில் இடம்பெற்றாலும் இவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை அணித்தலைவர் தோனி !! காரணம்.. தெரியவில்லை.. சரி.. முதல் போட்டியில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணினாரோ என நினைதேன்..

இதேபோல நேற்று (30 April) நடைபெற்ற போட்டியில் ஜகதி (Shadab Jakati) என்ற பௌலர் அணியில் இடம்பெற்று ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்தார் !!

இது போல ஒரு பண்டுவீச்சாலரை அணியில் வைத்துக்கொண்டு உபயோகிக்காமல் இருப்பதற்கு பதிலாக ஒரு ஆல்ரௌண்டர் -யோ அல்லது கூடுதலாக ஒரு பாட்ஸ்மேன் -யோ களமிறக்கி இருக்கலாமே ?

IPL -இல் எடுக்கப்படும் ஆச்சர்யமான முயற்சிகளில் இதுவும் ஒன்றோ ??

பி.கு : யாருக்கேனும் இந்த முயற்சிக்கான காரணம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !முடிவுக்கு வந்த திக் திக் இரவு !!

தலைப்பை படித்துவிட்டு ஏதோ திகில் கதை சொல்ல போகிறேன் என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை இப்போதே , இங்கேயே விட்டுடுங்க !

பதிவு எழுதலாம்னு தொடங்கினதோடு சரி... அதுக்கப்புறம் எழுதுவதற்கு சந்தர்பம் / நேரம் கிடைக்கலை.. கடந்த ரெண்டு, மூணு வாரமா பயங்கர பிஸி-ஆ (ஏதோ பழமொழி சொல்லுவாங்களே.. "நாய்க்கும் வேலை இல்லை.. நிக்கரதுக்கும் நேரம் இல்லை-னு", அது மாதிரி !) போய்டுச்சு..

ஆல்ரைட்.. விஷயத்துக்கு வருவோம் !

மேட்டர் ஆபீஸ்-ல முடிஞ்ச என்னோட லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் பத்தி தான் !! ( அட கொடுமையே இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா-னு சலிச்சுக்கறவங்க இங்கேயே எஸ்கேப் ஆய்டுங்க.. :) )

கடந்த ஆறு மாசத்துக்கு மேல இந்த குழப்பமான ப்ராஜெக்ட்-ல வேலை செஞ்சு.. அது ஒரு வழியா நேத்திக்கு இரவு லைவ் போச்சு.. சிக்கல்களும் , அவிழ்க்க முடியாத பல மர்ம முடிச்சுக்கள் நிறைந்த இந்த வேலைய (நம்மதான் தெளிவா முடிச்சவுப்போமே..) என்ன மாதிரி சில அப்பாவிகள் தலை-ல கட்டிட்டாங்க.. நாங்களும் .. ஹே.. இதெல்லாம் ஜுஜுபீ.. எங்களுக்கு எல்லாமே தெரியுங்கற மாதிரியே காட்டிகிட்டு (இல்லைன்னா வேலை இல்ல-னு சொல்லிடுவானுகலே படுபாவி மக்கா!) ஒரு மாதிரி போராடி இந்த வேலையே முடிச்சுட்டோம்.. அந்த அனுபவத்தோட சில துளிகள கிறுக்கலாம்னு தோணிச்சு .. அவை இதோ !

Tech lead -ங்கற பேர்ல ஒரு வயசான பாட்டிய போட்டு.. அந்தம்மா பாவம் எங்க எல்லாரோட desk- க்கும் நடந்து நடந்து முழங்கால், முட்டியெல்லாம் தேஞ்சு போய்டுச்சு !! இந்த வயசுல பாவம் சில அதிர்ச்சியான விஷயங்கள அவங்களுக்கு சொல்லறதுக்கு நாங்க பட்ட பாடு !! ஸ்ஸ்ஸ் ஸப்பா ரொம்பவே கண்ண கட்டிடுச்சு.. நேரா போயிட்டு "நம்ம design வேலை செய்யலேங்க logic மாத்தனும்" -னு சொல்ல வேண்டிய சமாச்சாரத்தே, ரொம்ப ரொம்ப நாசூக்கா சொல்லுவோம் .. நேரடியா அப்படியே விஷயத்தே சொல்லி, "ஐயோ ... அப்படியா ?"-னு நெஞ்ச புடிச்சுகிட்டு (சில படங்கள்லே மனோரம்மா செய்வாங்களே அப்படி...) விழுந்து .. எதாவது ஆகிடுச்சுன்னா .. அப்புறம் வேலையும் & project ரெண்டுமே பெப்பே ஆகிடும் !!

எல்லா வேலையும் முடிச்சு வெச்சுட்டு load -க்கு ரெடி-ஆ இருக்கும்போது என்னோட பார்ட்னர் "தங்காச்சிக்கு கன்னாலம்பா, நான் இந்தியா போறேன்"-னு சொல்லி எஸ் ஆய்ட்டான் !! பாவிப்பயலே.. துரோகி... இந்த சமயத்துல அண்ணனே தனியா விட்டுட்டு போறியே-னு கேக்கனும்போல தோணினாலும், "சிங்கம் சிங்கள்-ஆ" நின்னு கலக்கிடும் -னு நானே எனக்கு நம்பிக்கை சொல்லி மனச தேத்திக்கிட்டேன் !

ஆக.. ஒரு வழியா எல்லா போராட்டமும் முடிஞ்சு நேத்திக்கு நைட் load போறோம்... எங்க மேனேஜர் அம்மாவும் வந்துட்டாங்க load-க்கு "motivate" பண்றேன்-னு சொல்லிக்கிட்டு... சும்ம்மாவே பெரிய்ய்ய ப்ராஜெக்ட் load -ங்கற பயம்... இதுல இவங்க வேற அந்த ரூம்-ல !! உள்ளுக்குள்ளே ரொம்பவே அல்லு உட்டாலும்... அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம .. தைரியமா.. கந்தர் ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே.. கில்லி மாதிரி load பண்ண ரெடி ஆயாச்சு ! கிட்டத்தட்ட அந்த conference -ல ஒரு முப்பது பேர் இருந்திருப்பாங்கன்னு நெனைக்கறேன்.. அடடா.. ஏற்கனவே சிஸ்டம்-ல இருக்குதுன்னு தெரிஞ்ச பிரச்சனையக்கூட .. "போச்சு .. ஏதோ பிரச்சனை-னு நெனைக்கறேன்"-னு ஒருத்தன் கெளப்புவான்.. உடனே இன்னொரு வாய்ஸ் "இது டெஸ்டிங் -ல எப்படி பார்க்காம விட்டீங்க?" -னு .. ஒரு வழியா எல்லாத்தையும் load பண்ணி முடிச்சு .. நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு கெளம்பும்போது இருந்த நிம்மதி .... சொல்ல வார்த்தை இல்ல..

என்னதான் டென்ஷன், பரபரப்பு இதெல்லாம் இருந்தாலும்.. இந்த த்ரில்-ம் ஒரு வகை-ல நல்லா தான் இருந்துது... ஏதோ ஒரு roller coaster ride போன மாதிரி ஒரு அனுபவம் !!

பி.கு : இது Tamilish.com -இல் எனது முதல் பதிவு !போதை !

Apr 3, 2009


அரசாங்கம் இரண்டு மதுக்கடைகளை அருகில் வைக்க அனுமதிப்பதில்லை.


ஆண்டவா, நீ மட்டும் என்னவளின் முகத்தில் வைத்தாய், அருகருகே இரு கண்களாய் !நாடு திரும்பும் நண்பர்கள் !

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க !! ஊருக்கு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க !

ஆபீஸ்-ல என்னோட ரெண்டு நெருங்கிய நண்பர்களும் ஊருக்கு கெளம்ப வேண்டிய கட்டாயம் வந்திருச்சு.. அவங்கள offshore (சென்னை) வந்து வேலைய தொடர சொல்லிட்டாங்க ( வேலை இருக்குங்கற வரைக்கும் சந்தோஷம் தான் !!).

நவநீ நாளைக்கு சென்னை புறப்படுறான்... சந்தோஷமாக.( பெண் தோழிகளோட காத்திருப்பு நிறைவடைகின்ற நாள் வந்தாச்சு !!)

ராம் அடுத்த வாரம் கெளம்பறான்.. அவனும் ஒரு இணைபுரியாத ஒரு சந்தோஷத்தோட தான் புறப்படுவான்-னு நெனைக்கறேன்.. புது நட்பை சந்திக்க போற மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் !!

எனக்கு ஆபீஸ்-ல இனிமேல் கொஞ்சம் கடியா தான் இருக்கும்.. "கடமையே கண்ணாயிரமாக" இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுவேன் !!

நவநீ / ராம் .... Good luck guyz ... Will miss you !

- செந்தில் !

அன்புள்ள அப்பா... வருக வருக !!

எனை தொடர்ந்து (என்று சொல்ல மாட்டேன் !!) என் அப்பாவும் தனது புதிய வலைப்பதிவை துவக்கி விட்டார் !! ஒரே வித்தியாசம் தான்... அவரு நல்லா எழுதுவாரு ... அவர ஒப்பிட்டு பாக்கும்போது நான் ரொம்பவே கத்துக்குட்டி தான் !!
என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவரை இந்த வலைப்பதிவு உலகுக்கு வரவேற்ப்பதில் பெருமைப்படுகிறேன்..
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் !!

என் அப்பாவின் வலைப்பதிவை இங்கே படிக்கலாம் !


கேட்டதை கொடுக்கும் தொழில்நுட்பம் !

Apr 1, 2009

என்னோட இந்த blog பற்றி என் நண்பன் கிட்டே சொன்னேன்... அப்போது அவன்.. 'நீங்க புதுசா ஒரு பதிவு போட்டிருகீங்கனு எனக்கு ஒரு mail வந்துதுன்னா இன்னும் வசதியா இருக்கும்.. நான் உடனே வந்து படிக்க சுலபமா இருக்கும்" னு சொன்னான்... கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நான் வேற ஒரு blog படிச்சுட்டு இருக்கும்போது பாத்தா 'Feedburner' - ங்கற வசதியாள அதை செய்ய முடியும்-னு தெரிஞ்சுது.. ஏதோ சினிமா-ல சொல்லற வசனம் 'Technology has grown so much' தான் ஞாபகம் வந்துச்சு !!

இவள் அல்லவா தமிழச்சி

இன்னைல இருந்து கிறுக்க ஆரம்பிக்கலாம்னு பலமா முடிவு பண்ணி... இந்த வலைத்தளத்த உருவாக்கிட்டு பெருமையா என்னோட மனைவிக்கு போன் போட்டு "படிச்சு பாருன்னு" சொன்னேன்.. வெறும் 8 அல்லது 9 வரிகள் மட்டுமே இருந்த என்னோட முதல் கிறுக்கல படிக்கறதுக்கே அவளுக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு !! ஒவ்வொரு எழுத்தா கூட்டி கூட்டி அவ அத படிச்ச அழக கேட்ட உடனே எனக்கு சொல்லணும் தோணினது - " அடடா இவள் அல்லவா தமிழச்சி !! ".

முதல் கிறுக்கல் !

முட்டாள்கள் தினத்தன்று எனது முதல் கிறுக்கலை பதிவு செய்வது ஏதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வு தான் !!

கடந்த சில நாட்களாக Tamilish.com -இல் தொகுக்கப்பட்ட சில பல பதிவுகளை ரசித்து படித்து மகிழ்ந்த நான் - ஏன் நாமும் மனதில் தோன்றியவைகளை பதிவு செய்ய கூடாது என்ற எண்ணம் எழுந்தது .. விளைவு ... சரி நாமும் எழுதுவோம் .. மன்னிக்கவும் .. கிறுக்குவோம் , அந்த கொடுமையை மக்கள் அனுபவிக்கட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

தொடரும் .

- செந்தில்.