மீண்டு(ம்) வருகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ் ?

May 4, 2009


இன்னிக்கு (04-May) ஆட்டத்தில இருந்த வேகம், எடுத்த முடிவுகள், அதுக்கு கெடைச்ச வெற்றி - எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா.. 'வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ' வர்ற மாதிரியே தெரியுது.. பொறுத்திருந்து பாப்போம், இன்னும் நெறையா ஆட்டங்கள் பாக்கி இருக்கு... நம்ம பசங்க என்ன செய்ய போறாங்கன்னு பாக்கலாம்...

சென்னை அணியோட (தற்போதைய) பலங்கள் -

1. நல்ல பார்ம்-ல இருக்கற பேட்ஸ்மென்கள் -
  • ஹய்டேன் .. தல பட்டய கெளப்பிகிட்டு இருக்கு.. தொடர்ந்து கெளப்புமா ??
  • ரெய்னா .. இள ரத்தம் .. ஒரே சிக்ஸர் , போர்னு தான் வேலாசிகிட்டு இருக்காரு.. அதிரடி தொடர்ந்தா அருமை..
  • பத்ரி & விஜய் .. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் !! நிதானமா தெரிஞ்சாலும், consistent -ஆ ரன் அடிச்சா போதும்!!..
  • தோனி.. ஒரு வழியா அதிரடி ஆட்டம் மறுபடியும் கொஞ்சம் 'தல' காட்டுது.. இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டினா.. பழைய தோனியா வரணும் (சத்ரியன் ஸ்டைல்-ல!)

2. எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலர்கள் -

  • பாலாஜி - தங்கத்தமிழன்.. இப்போ வரைக்கும் (இன்னிக்கித்த மேட்ச் தவிர !) நல்லா தான் வீசிக்கிட்டு இருக்காரு.. அய்யா.. போன வருஷம் IPL final ஞாபகத்துல வெச்சுகிட்டு பந்து வீசினா சரி...
  • முரளி.. அட்டகாசம்.. அருமை.. வேற என்ன சொல்ல..
  • ஜகதி / தியாகி .. புதிய கண்டுபிடிப்புகள்.. underdogs -னு சொல்லலாம்.. யாரும் எதிர்பாக்களை இவ்ளோ நல்லா விளையாடுவாங்கன்னு .. சபாஷ்... தொடரட்டும் !!
  • மோர்க்கேல் / ஜாகோப் ஓரம் - ரெண்டு பேரும் திறமைசாலிகள்தான் .. இன்னும் நல்லா வெளையாடலாம்..

இப்போ points table-ல 9 points எடுத்து முதல் எடத்துல இருந்தாலும்.. இது நாளைக்கு வரைக்கும் தான்.. பஞ்சாப் , டெல்லி & ராஜஸ்தான் அணிகள் நாளைக்கு ஆட்டத்தோட முடிவுல புள்ளிகள் அதிகமாகி மேல வரலாம்.. மும்பை அணி புதன்கிழமை ஆட்டத்துல ஜெயிச்சா அவுங்களும் மேல வந்துடுவாங்க...

ஆகமொத்தம் ... தொடர்ந்து நல்லா விளையாடினா மட்டும் தான் சென்னை தன்னோட எடத்த தக்க வெச்சுக்க முடியும்...

நல்லா விளையாடுமா ? ஹய்டேன், ரெய்னா, தோனி, முரளி, பாலாஜி, இவங்களோட இப்போ நல்லா விளையாடிட்டு இருக்கற ஜகதி, தியாகி, பத்ரி & விஜய் எல்லாரும் தோள் குடுத்தா ... வெற்றி நிச்சயம் !! (ஹ்ம்ம்.. சொல்லறதுக்கு நல்லாத்தான் இருக்கு... செய்வாங்களா??)






6 comments:

கடைக்குட்டி said...

சொல்றதுக்கு நல்லாத்தான் இருக்கும்...

பாப்போம்...

செந்தில்குமார் said...

@ கடைக்குட்டி :
உண்மைதான் ..பொறுத்திருந்து பாப்போம் !!

Suresh said...

மிக அருமையான சரளமான எழுத்து நடை, அப்புறம் உங்க கேப்ஷன் எனக்கு நல்லா பொருந்தும் ;) எழுத்துபிழை ஹா ஹா

அருமையான எழுத்து மற்றும், கருத்துகள், உங்க கருத்துகள் பெரும்பாலும் எனக்கும் இருந்தது, மிக சரி இனி சென்னை கிங்க் தான்

:-)

பதிவுலக்கு வருகை தந்து இருக்கும் உங்களுக்கு எங்க வாழ்த்துகள், ஏதேனும் உதவி வேண்டும் என்றால் கண்டிப்பா மெயில் தட்டுங்க

வாழ்க வளமுடன் இனி நான் உங்க பாலோவர்

செந்தில்குமார் said...

@சுரேஷ் :

மிக்க நன்றி.. உங்க பின்னூட்டம் எனக்கு தொடர்ந்து எழுதணும்கற உத்வேகத்த குடுக்குது..

சர்க்கரை பதிவு ரொம்ப அருமை-யா இருக்கு.. சரத்பாபு பேட்டி சூப்பர் !!

இந்த பின்னூட்டம் சமாச்சாரத்துல தான் தலைவரே கொஞ்சம் உதவி தேவைப்படுது.. அதைப்பத்தி மெயில் தட்டறேன்.. மீண்டும் நன்றி !!

நெல்லைத்தமிழ் said...

பாலாஜி - தங்கத்தமிழன்.. இப்போ வரைக்கும் (இன்னிக்கித்த மேட்ச் தவிர !) நல்லா தான் வீசிக்கிட்டு இருக்காரு.. அய்யா.. போன வருஷம் IPL final ஞாபகத்துல வெச்சுகிட்டு பந்து வீசினா சரி...///

பாலாஜியின் பந்து வீச்சு சொதப்பல் சார்.. இவருக்கு ரெய்னா பந்துவீ்ச்சிலும் பெட்டர்.

செந்தில்குமார் said...

@ நெல்லைத்தமிழ் :

இல்லேங்க.. கொஞ்சம் ரன் வாரி வழங்கி இருந்தாலும், சென்னை டீம்-ல அதிகம் wickets எடுத்தவர் பாலாஜி தாங்க.. Most wickets லிஸ்ட்-ல நாலாவதா இருக்காருங்க இப்போதைக்கு...