"100 நாட் அவுட் " - வாழ்த்துக்கள் வசந்த் !!

Jun 18, 2009



இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....படம் போட்டு கலக்கும், வார்த்தை விளையாட்டு 'வித்தகர்', தலைவர் 'பிரியமுடன் வசந்த்' அவர்கள் அடுத்து எழுதப்போவது 'அவருடைய நூறாவது பதிவு.... '

அன்னாரது பணி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்தும்,

அடியேன்,
'பொடியன்' செந்தில்...




பி.கு : ஸ்ஸப்பா.. முதல் முறையா 'சக்கரை' சுரேஷ்க்கு முன்னாடி ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லியாச்சு... !!


வருகிறேன் சென்னை !!

Jun 16, 2009


ருபத்தி இரண்டு மாதங்களாகிவிட்டது சென்னையை விட்டு இங்கு வந்து... (ங்கொய்யால எவ்ளோ நாளாகிப்போச்சு)

நட்புகள், உறவுகள், சுற்றித்திரிந்த தெருக்கள் (சைட் அடிச்ச ஃபிகர்கள விட்டுட்டியேன்னு மனசாட்சி எக்கோ குடுக்குது...), வாரந்தோறும் விளையாடிய 'சோமசுந்தரம் கிரவுண்டு', 'நெருங்கிப்'பழகிய தி.நகர் கடைகள் (யப்பா.. எம்பூட்டு கூட்டம்), சில்லென்ற கடற்கரை காற்று இவையனைத்தையும் துறந்து இங்கு வரவேண்டிய அலுவலக கட்டாயம்..

ஒருவழியாக வந்த வேலை இனிதே முடிவடைய (விடுவோமா, முடிச்சுட்டோம்ல!!), இந்த மாத இறுதியில் சென்னை திரும்ப முடிவாயிற்று !! ஆஹா... என்ன ஒரு நிறைவான உணர்வு அது (வெய்யிலுக்கு கும்முன்னு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி !!).. மீண்டும் 'நம்ம' ஊருக்கு திரும்பப்போகிறோம் என்கிற ஆனந்தம் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது.... கடந்த சில நாட்களாகவே வீட்டில் மனைவி 'இன்னும் பதினெட்டு நாட்கள் தான்.. இன்னும் பதினேழு நாட்கள் தான்' என்று (இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு குடுக்கற கவுன்ட்டவுன் மாதிரி) பூரித்துக்கொண்டிருக்கிறாள்..

மெரிக்கா - தொழில் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் (அதாங்க பர்சனல் லைப் - அத 'டேமில் '-ல சொல்ல தெரியலே.. :)) ) எனக்கு நன்றாகவே வாழ்வளித்தது.. மிகப்பெரிய பதவி உயர்வையும் தந்திருக்கிறது. ஆமாம், 'அப்பா' என்ற பதவி உயர்வு கிடைத்ததும் இந்த 22 மாதங்களுக்குள்ளாகத்தான். ஒப்பிட முடியாத, மட்டற்ற மகிழ்ச்சியை தந்த அனுபவம் அது !!

ஆக, ஜூன் 29 -ஆம் தேதியன்று, மிகுந்த மன நிறைவோடு அமெரிக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னையை நோக்கி எனது பயணத்தை தொடங்கப்போகிறேன்..

ருகிறேன் சென்னை, வாரி அணைக்கக் காத்திருக்கும் உறவுகளும் நட்புக்களுக்கும் எனது வாயார, மனமார நன்றிகளைக் கூறி விடுவேன்.... ஆனால், எனை ஓய்வின்றித் தாங்கி, பிரியா விடைகொடுத்தனுப்பிய தாய்மண்ணே, உனக்கெப்படி நன்றி சொல்வேன் ? உன்னுடன் மீண்டும் சேர ஓடோடி வருகிறேன். வருகிறேன் சென்னை... !!



நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...

Jun 11, 2009

என்னடா இவன்.... ரஜினி, விஜய் & சூர்யா- வுக்கெல்லாம் திடீர்னு நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா... ??

இவங்கெல்லாம் எனக்கு தினமும் செய்யற உதவிக்கு 'நன்றி'ன்னு ஒரு வார்த்தைல நன்றிக்கடன செலுத்த முடியாது..

என் மகனோட வயசு இப்போ பத்து மாசம்.. சார் இப்போதான் முழுமூச்சா வீடெங்கும் தவழறதும், எதையாவது புடிச்சு எழுந்திருக்கரதுமா பிசியா இருக்காரு... அவர பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடி நானும் என் மனைவியும் ஒரு சில சுத்துக்கள் இளைச்சாச்சு.. :)

இப்படி அவரு வீட்ல சும்மா இருக்கும்போது செய்யற குரும்புகளே ஏராளம்.. அப்படி இருக்கையில இவனுக்கு சாப்பாடு குடுக்கரதுங்கறது ஒரு பெரிய சவாலாவே இருக்கும்... ஒரு சில நாட்களுக்கு முன்னாடி, youtube -ல தமிழ் கார்ட்டூன் பாட்டுக்கள் போட்டா அதை விரும்பி பாக்க ஆரம்பிச்சான்.. ஒரு எடத்துல அமைதியா கொஞ்ச நேரம் அவன உக்கார வெக்கணும்னா பாட்டு போட்டு விட்டா போதும்... அப்படியே ஒரு சாந்த சொரூபியா மாறிடுவான்....

இப்பெல்லாம் அவருக்கு சாப்பாடு குடுக்கறது ரொம்ப சுலபமாகிடுச்சு.. சிவாஜி, வாரணம் ஆயிரம், வில்லு -னு எந்த படத்துல இருந்து பாட்டு போட்டாலும், அதை ரசிச்சிக்கிட்டே சாப்டுடறான்...

'செய்நன்றி கொன்ற மகற்கு' உய்வில்லைன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரில்லையா ... அதான் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடலாம்னு இந்த பதிவு...

மீண்டும்... நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி & சூர்யா !!