"100 நாட் அவுட் " - வாழ்த்துக்கள் வசந்த் !!

Jun 18, 2009இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால்....படம் போட்டு கலக்கும், வார்த்தை விளையாட்டு 'வித்தகர்', தலைவர் 'பிரியமுடன் வசந்த்' அவர்கள் அடுத்து எழுதப்போவது 'அவருடைய நூறாவது பதிவு.... '

அன்னாரது பணி மேலும் சிறப்பாக தொடர வாழ்த்தும்,

அடியேன்,
'பொடியன்' செந்தில்...
பி.கு : ஸ்ஸப்பா.. முதல் முறையா 'சக்கரை' சுரேஷ்க்கு முன்னாடி ஒருத்தருக்கு வாழ்த்து சொல்லியாச்சு... !!


வருகிறேன் சென்னை !!

Jun 16, 2009


ருபத்தி இரண்டு மாதங்களாகிவிட்டது சென்னையை விட்டு இங்கு வந்து... (ங்கொய்யால எவ்ளோ நாளாகிப்போச்சு)

நட்புகள், உறவுகள், சுற்றித்திரிந்த தெருக்கள் (சைட் அடிச்ச ஃபிகர்கள விட்டுட்டியேன்னு மனசாட்சி எக்கோ குடுக்குது...), வாரந்தோறும் விளையாடிய 'சோமசுந்தரம் கிரவுண்டு', 'நெருங்கிப்'பழகிய தி.நகர் கடைகள் (யப்பா.. எம்பூட்டு கூட்டம்), சில்லென்ற கடற்கரை காற்று இவையனைத்தையும் துறந்து இங்கு வரவேண்டிய அலுவலக கட்டாயம்..

ஒருவழியாக வந்த வேலை இனிதே முடிவடைய (விடுவோமா, முடிச்சுட்டோம்ல!!), இந்த மாத இறுதியில் சென்னை திரும்ப முடிவாயிற்று !! ஆஹா... என்ன ஒரு நிறைவான உணர்வு அது (வெய்யிலுக்கு கும்முன்னு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி !!).. மீண்டும் 'நம்ம' ஊருக்கு திரும்பப்போகிறோம் என்கிற ஆனந்தம் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது.... கடந்த சில நாட்களாகவே வீட்டில் மனைவி 'இன்னும் பதினெட்டு நாட்கள் தான்.. இன்னும் பதினேழு நாட்கள் தான்' என்று (இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு குடுக்கற கவுன்ட்டவுன் மாதிரி) பூரித்துக்கொண்டிருக்கிறாள்..

மெரிக்கா - தொழில் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் (அதாங்க பர்சனல் லைப் - அத 'டேமில் '-ல சொல்ல தெரியலே.. :)) ) எனக்கு நன்றாகவே வாழ்வளித்தது.. மிகப்பெரிய பதவி உயர்வையும் தந்திருக்கிறது. ஆமாம், 'அப்பா' என்ற பதவி உயர்வு கிடைத்ததும் இந்த 22 மாதங்களுக்குள்ளாகத்தான். ஒப்பிட முடியாத, மட்டற்ற மகிழ்ச்சியை தந்த அனுபவம் அது !!

ஆக, ஜூன் 29 -ஆம் தேதியன்று, மிகுந்த மன நிறைவோடு அமெரிக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னையை நோக்கி எனது பயணத்தை தொடங்கப்போகிறேன்..

ருகிறேன் சென்னை, வாரி அணைக்கக் காத்திருக்கும் உறவுகளும் நட்புக்களுக்கும் எனது வாயார, மனமார நன்றிகளைக் கூறி விடுவேன்.... ஆனால், எனை ஓய்வின்றித் தாங்கி, பிரியா விடைகொடுத்தனுப்பிய தாய்மண்ணே, உனக்கெப்படி நன்றி சொல்வேன் ? உன்னுடன் மீண்டும் சேர ஓடோடி வருகிறேன். வருகிறேன் சென்னை... !!நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...

Jun 11, 2009

என்னடா இவன்.... ரஜினி, விஜய் & சூர்யா- வுக்கெல்லாம் திடீர்னு நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா... ??

இவங்கெல்லாம் எனக்கு தினமும் செய்யற உதவிக்கு 'நன்றி'ன்னு ஒரு வார்த்தைல நன்றிக்கடன செலுத்த முடியாது..

என் மகனோட வயசு இப்போ பத்து மாசம்.. சார் இப்போதான் முழுமூச்சா வீடெங்கும் தவழறதும், எதையாவது புடிச்சு எழுந்திருக்கரதுமா பிசியா இருக்காரு... அவர பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடி நானும் என் மனைவியும் ஒரு சில சுத்துக்கள் இளைச்சாச்சு.. :)

இப்படி அவரு வீட்ல சும்மா இருக்கும்போது செய்யற குரும்புகளே ஏராளம்.. அப்படி இருக்கையில இவனுக்கு சாப்பாடு குடுக்கரதுங்கறது ஒரு பெரிய சவாலாவே இருக்கும்... ஒரு சில நாட்களுக்கு முன்னாடி, youtube -ல தமிழ் கார்ட்டூன் பாட்டுக்கள் போட்டா அதை விரும்பி பாக்க ஆரம்பிச்சான்.. ஒரு எடத்துல அமைதியா கொஞ்ச நேரம் அவன உக்கார வெக்கணும்னா பாட்டு போட்டு விட்டா போதும்... அப்படியே ஒரு சாந்த சொரூபியா மாறிடுவான்....

இப்பெல்லாம் அவருக்கு சாப்பாடு குடுக்கறது ரொம்ப சுலபமாகிடுச்சு.. சிவாஜி, வாரணம் ஆயிரம், வில்லு -னு எந்த படத்துல இருந்து பாட்டு போட்டாலும், அதை ரசிச்சிக்கிட்டே சாப்டுடறான்...

'செய்நன்றி கொன்ற மகற்கு' உய்வில்லைன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரில்லையா ... அதான் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடலாம்னு இந்த பதிவு...

மீண்டும்... நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி & சூர்யா !!


மே 15 - 'சர்வதேச குடும்ப தினம்'

May 15, 2009


ஐக்கிய நாடுகள் சபையால் 1992 -ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டு, ஆண்டு தோறும் மே 15 -ஆம் தேதி 'சர்வதேச குடும்ப தினம்' -ஆக கடைபிடிக்கப்பட்டு வருகிறது..


குடும்பங்களுக்கிடையே, சமத்துவத்தை வளர்ப்பதுவும், வீட்டுப் பொறுப்புக்கள், தொழில் வாய்ப்புக்கள் பற்றி குடும்பங்களின் பங்கினை உணர்த்துவதும் இத்தினத்தின் முக்கிய குறிக்கோள்களாகும்.

சர்வதேச குடும்ப தினத்தின் கருப் பொருட்கள்:

1996 - “Families: First Victims of Poverty and Homelessness”
1997 - “Building Families Based on Partnership”
1998 - “Families: Educators and Providers of Human Rights”
1999 - “Families for all ages”
2000 - “Families: Agents and Beneficiaries of Development”
2001 - “Families and Volunteers: Building Social Cohesion ”
2002 - “Families and Ageing: Opportunities and Challenges”
2003 - “Preparations for the observance of the Tenth Anniversary of the International Year of the Family in 2004″
2004 - “The Tenth Anniversary of the International Year of the Family: A Framework for Action”
2005 - “HIV/AIDS and Family Well-being”
2006 - “Changing Families: Challenges and Opportunities”
2007 - “Families and Persons with Disabilities”
2008 - “Fathers and Families: Responsibilities and Challenges”
2009 - “Mothers and Families: Challenges in a Changing World”

இந்த ஆண்டு , மாறிவரும் உலகத்தில் அன்னையர்களும் குடும்பங்களும் சந்திக்கும் சவால்களை கருவாகக்கொண்டு, அந்த சவால்களை எதிர் கொள்ளவும், அன்னையர்கள் சந்திக்கும் பிரச்சனைகளையும், அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

நேற்று இது குறித்து ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்ட அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளில் உள்ள மகப்பேறு மருத்துவ வசதிகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் பெண் கல்விக்கான அவசியம் குறித்த முக்கியத்துவத்தை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், "மாறி வரும் உலகில் , பல சவால்களை நாம் எதிர்நோக்கி உள்ள இந்த சூழ்நிலையில், ஒரு சிறந்த அடுத்த தலைமுறையை உருவாக்குவதில் அன்னையர்களின் மகத்தான பங்கு இருப்பது உண்மை " என்றும் குறிப்பிட்டுள்ளனர் .

அன்னையர் தினம் கொண்டாடிய இதே வாரத்தில் 'சர்வதேச குடும்ப தின'த்திலும் அன்னையர்குளுக்கு முக்கயத்துவம் கொடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது..கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கும் முயற்ச்சியில் 'சண்முகா ஸ்டோர்ஸ்' !!

May 11, 2009


இந்த IPL-ல சரியா விளையாடாத ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை' வாங்கறதுக்கு "சண்முகா ஸ்டோர்ஸ்" குரூப் (அதாங்க.. நம்ம அண்ணாச்சியின் குழுமம்) முயற்சி செய்யப்போறதா நியூஸ் லீக் ஆகிருக்கு.. கீழ கொடுக்கப்பட்டிருக்கற நிபந்தனைகளுக்கு லலித் மோடியும் ஷாருக்கானும் ஒத்துக்கிட்டா இந்த டீல் முடிஞ்சிடுமாம்...

1. மொத்தல்ல இந்த 'ஜிகுஜிகு'-னு (கருப்பும் தங்க கலரும்) அடிக்கற கலர்ல இருக்கற டிரெஸ்ஸ மாத்தனும்.. நீல நிற சட்டையும் கருப்பு அல்லது பிரவுன் நிற பேண்டும் தான் போட்டு வெளையாடனும்... இந்த சீருடையும் (இதுக்கு உடை-னு சொல்லறதே ஓவர்... இதுல சீருடை...!!) சண்முகா ஸ்டோர்ஸ்-ல இருந்தே குடுத்துடுவோம்.. (அந்த மீட்டர் மூணே முக்கால் ரூவா காஸ்ட்லி துணில தச்சு..).... ஷூ , சாக்ஸ் எல்லாம் கொறஞ்ச விலைக்கு (Bata Showroom- இல் கிடைக்கறத விட குறைவா) சண்முகா ஸ்டோர்ஸ்லையே வாங்கிக்கலாம்..

2. இப்போ இருக்கற உலக பொருளாதாரத்த கருத்துல கொண்டு.. செலவுகள குறைக்கற முயற்சில...
  • ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ஹோட்டல் ரூம் புக் பண்றத நிறுத்திட்டு எல்லா வீரர்களும் ஒரே இடத்துல (நல்லா வசதியா !!) தங்கிக்கற மாதிரி கல்யாண மண்டபம் அல்லது எளிமண்டரி ஸ்கூல் க்லாஸ்ரூம் ஏற்பாடு செஞ்சு தரப்படும்... (சாப்பாடு பத்தி கவலைப்பட வேண்டாம்.. சண்முகா குரூப் காடேரிங்- -ல இருந்து உணவு வழங்கப்படும்...)
  • வெளையாடற கிரவண்டுக்கு போக வர சைக்கிள் வாங்கி (அல்லது வாடகைக்கு எடுத்து) கொடுக்கப்படும்.. உடற்பயிற்சியும் செஞ்ச மாதிரி ஆச்சு.. செலவும் குறையும்..

3. மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு ரெண்டு மணிநேரத்துக்கு மின்னாடியே எல்லா வீரர்களும் கிரவுண்டுக்கு வந்துடனும்.. வந்து சம்சா, வடை, போண்டா, பெப்சி, கோக், தண்ணி பாட்டில், இதெல்லாம் விக்கணும்.. ஒவ்வொருத்தரும் எவ்வளவு விக்கறாங்க-னு கணக்கு பாத்து அதன் அடிப்படையில சம்பளம் கொடுக்கப்படும்... (நெறியா விக்கறவங்களுக்கு கேப்டன் பதவி கூட போனஸ்-ஆ கொடுக்கப்படலாம்).


4. பாதுகாப்பு நடவடிக்கைகள கருத்துல கொண்டு, 'Z' பிரிவிலும் மேலான 'சண்முகா ஸ்டோர்ஸ்'-இன் செக்குரிட்டிகள் பணியமர்த்தப்படுவார்கள்.. லலித் மோடி விருப்பபட்டா கிரவுண்டுல இருக்கற மத்த செக்குரிடிகள எடுத்துட்டு இந்த செக்குரிட்டிகலயே பயன்படுத்திக்கலாம்..

கடைசியாக..

சரியா விளையாடாத வீரர்கள் தொடர் முடிஞ்ச பிறகு சென்னை-ல 'பிரம்மாண்டமாய்' இருக்கற 'சண்முகா ஸ்டோர்ஸ்'-ல ஒரு மாசம் வேலை செய்யணும்...

'Fake IPL Player' - Blog எழுதற வீரரும் யாருன்னு கண்டுபிடிச்சு , இந்த மாசம் முழுதும் ரங்கநாதன் தெரு கடையில வாசல்-ல கூட்டத்த கட்டுப்படுத்தற வேலை குடுக்கப்படும்..

டிஸ்கி : மேல சொல்லி இருக்கற எல்லா மேட்டரும் கற்பனையே (IPL, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லலித் மோடி, ஷாருக்கான் - தவிர) எந்த ஒரு நபரையோ 'குரூப்'-பயோ குறுப்பிட்டு சொல்லப்பட்டதல்ல.. சொல்லி இருக்கற விஷயம் யாரோடயாவது ஒத்துபோகுதுன்னா, அது ஏதேச்சையாக நடந்தது தான்.. அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.