மகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் !

Apr 30, 2009

இந்த ஆண்டின் IPL -இல் தோனி எடுக்கும் ஒரு சில முடிவுகள் / முயற்சிகள் சற்றே தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது !

சென்னை சூப்பர் கிங்க்ஸ்-இன் முதல் போட்டியில் தமிழகத்தின் இளம் வீரர் 'ரவிச்சந்த்ரா அஷ்வின்' டீம்-இல் இருந்தார்.. [ இந்திய அணிக்காக கண்டறியப்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களில் (Future Probables) இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ]. அணியில் இடம்பெற்றாலும் இவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை அணித்தலைவர் தோனி !! காரணம்.. தெரியவில்லை.. சரி.. முதல் போட்டியில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணினாரோ என நினைதேன்..

இதேபோல நேற்று (30 April) நடைபெற்ற போட்டியில் ஜகதி (Shadab Jakati) என்ற பௌலர் அணியில் இடம்பெற்று ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்தார் !!

இது போல ஒரு பண்டுவீச்சாலரை அணியில் வைத்துக்கொண்டு உபயோகிக்காமல் இருப்பதற்கு பதிலாக ஒரு ஆல்ரௌண்டர் -யோ அல்லது கூடுதலாக ஒரு பாட்ஸ்மேன் -யோ களமிறக்கி இருக்கலாமே ?

IPL -இல் எடுக்கப்படும் ஆச்சர்யமான முயற்சிகளில் இதுவும் ஒன்றோ ??

பி.கு : யாருக்கேனும் இந்த முயற்சிக்கான காரணம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !



முடிவுக்கு வந்த திக் திக் இரவு !!

தலைப்பை படித்துவிட்டு ஏதோ திகில் கதை சொல்ல போகிறேன் என்று நினைத்திருந்தால் அந்த நினைப்பை இப்போதே , இங்கேயே விட்டுடுங்க !

பதிவு எழுதலாம்னு தொடங்கினதோடு சரி... அதுக்கப்புறம் எழுதுவதற்கு சந்தர்பம் / நேரம் கிடைக்கலை.. கடந்த ரெண்டு, மூணு வாரமா பயங்கர பிஸி-ஆ (ஏதோ பழமொழி சொல்லுவாங்களே.. "நாய்க்கும் வேலை இல்லை.. நிக்கரதுக்கும் நேரம் இல்லை-னு", அது மாதிரி !) போய்டுச்சு..

ஆல்ரைட்.. விஷயத்துக்கு வருவோம் !

மேட்டர் ஆபீஸ்-ல முடிஞ்ச என்னோட லேட்டஸ்ட் ப்ராஜெக்ட் பத்தி தான் !! ( அட கொடுமையே இதுக்கு தான் இவ்ளோ பில்டப்பா-னு சலிச்சுக்கறவங்க இங்கேயே எஸ்கேப் ஆய்டுங்க.. :) )

கடந்த ஆறு மாசத்துக்கு மேல இந்த குழப்பமான ப்ராஜெக்ட்-ல வேலை செஞ்சு.. அது ஒரு வழியா நேத்திக்கு இரவு லைவ் போச்சு.. சிக்கல்களும் , அவிழ்க்க முடியாத பல மர்ம முடிச்சுக்கள் நிறைந்த இந்த வேலைய (நம்மதான் தெளிவா முடிச்சவுப்போமே..) என்ன மாதிரி சில அப்பாவிகள் தலை-ல கட்டிட்டாங்க.. நாங்களும் .. ஹே.. இதெல்லாம் ஜுஜுபீ.. எங்களுக்கு எல்லாமே தெரியுங்கற மாதிரியே காட்டிகிட்டு (இல்லைன்னா வேலை இல்ல-னு சொல்லிடுவானுகலே படுபாவி மக்கா!) ஒரு மாதிரி போராடி இந்த வேலையே முடிச்சுட்டோம்.. அந்த அனுபவத்தோட சில துளிகள கிறுக்கலாம்னு தோணிச்சு .. அவை இதோ !

Tech lead -ங்கற பேர்ல ஒரு வயசான பாட்டிய போட்டு.. அந்தம்மா பாவம் எங்க எல்லாரோட desk- க்கும் நடந்து நடந்து முழங்கால், முட்டியெல்லாம் தேஞ்சு போய்டுச்சு !! இந்த வயசுல பாவம் சில அதிர்ச்சியான விஷயங்கள அவங்களுக்கு சொல்லறதுக்கு நாங்க பட்ட பாடு !! ஸ்ஸ்ஸ் ஸப்பா ரொம்பவே கண்ண கட்டிடுச்சு.. நேரா போயிட்டு "நம்ம design வேலை செய்யலேங்க logic மாத்தனும்" -னு சொல்ல வேண்டிய சமாச்சாரத்தே, ரொம்ப ரொம்ப நாசூக்கா சொல்லுவோம் .. நேரடியா அப்படியே விஷயத்தே சொல்லி, "ஐயோ ... அப்படியா ?"-னு நெஞ்ச புடிச்சுகிட்டு (சில படங்கள்லே மனோரம்மா செய்வாங்களே அப்படி...) விழுந்து .. எதாவது ஆகிடுச்சுன்னா .. அப்புறம் வேலையும் & project ரெண்டுமே பெப்பே ஆகிடும் !!

எல்லா வேலையும் முடிச்சு வெச்சுட்டு load -க்கு ரெடி-ஆ இருக்கும்போது என்னோட பார்ட்னர் "தங்காச்சிக்கு கன்னாலம்பா, நான் இந்தியா போறேன்"-னு சொல்லி எஸ் ஆய்ட்டான் !! பாவிப்பயலே.. துரோகி... இந்த சமயத்துல அண்ணனே தனியா விட்டுட்டு போறியே-னு கேக்கனும்போல தோணினாலும், "சிங்கம் சிங்கள்-ஆ" நின்னு கலக்கிடும் -னு நானே எனக்கு நம்பிக்கை சொல்லி மனச தேத்திக்கிட்டேன் !

ஆக.. ஒரு வழியா எல்லா போராட்டமும் முடிஞ்சு நேத்திக்கு நைட் load போறோம்... எங்க மேனேஜர் அம்மாவும் வந்துட்டாங்க load-க்கு "motivate" பண்றேன்-னு சொல்லிக்கிட்டு... சும்ம்மாவே பெரிய்ய்ய ப்ராஜெக்ட் load -ங்கற பயம்... இதுல இவங்க வேற அந்த ரூம்-ல !! உள்ளுக்குள்ளே ரொம்பவே அல்லு உட்டாலும்... அதையெல்லாம் வெளிக்காட்டிக்காம .. தைரியமா.. கந்தர் ஷஷ்டி கவசம் சொல்லிகிட்டே.. கில்லி மாதிரி load பண்ண ரெடி ஆயாச்சு ! கிட்டத்தட்ட அந்த conference -ல ஒரு முப்பது பேர் இருந்திருப்பாங்கன்னு நெனைக்கறேன்.. அடடா.. ஏற்கனவே சிஸ்டம்-ல இருக்குதுன்னு தெரிஞ்ச பிரச்சனையக்கூட .. "போச்சு .. ஏதோ பிரச்சனை-னு நெனைக்கறேன்"-னு ஒருத்தன் கெளப்புவான்.. உடனே இன்னொரு வாய்ஸ் "இது டெஸ்டிங் -ல எப்படி பார்க்காம விட்டீங்க?" -னு .. ஒரு வழியா எல்லாத்தையும் load பண்ணி முடிச்சு .. நைட் ரெண்டு மணிக்கு வீட்டுக்கு கெளம்பும்போது இருந்த நிம்மதி .... சொல்ல வார்த்தை இல்ல..

என்னதான் டென்ஷன், பரபரப்பு இதெல்லாம் இருந்தாலும்.. இந்த த்ரில்-ம் ஒரு வகை-ல நல்லா தான் இருந்துது... ஏதோ ஒரு roller coaster ride போன மாதிரி ஒரு அனுபவம் !!

பி.கு : இது Tamilish.com -இல் எனது முதல் பதிவு !



போதை !

Apr 3, 2009


அரசாங்கம் இரண்டு மதுக்கடைகளை அருகில் வைக்க அனுமதிப்பதில்லை.


ஆண்டவா, நீ மட்டும் என்னவளின் முகத்தில் வைத்தாய், அருகருகே இரு கண்களாய் !



நாடு திரும்பும் நண்பர்கள் !

ஆரம்பிச்சுட்டாய்ங்கய்யா ஆரம்பிச்சுட்டாய்ங்க !! ஊருக்கு போக ஆரம்பிச்சுட்டாய்ங்க !

ஆபீஸ்-ல என்னோட ரெண்டு நெருங்கிய நண்பர்களும் ஊருக்கு கெளம்ப வேண்டிய கட்டாயம் வந்திருச்சு.. அவங்கள offshore (சென்னை) வந்து வேலைய தொடர சொல்லிட்டாங்க ( வேலை இருக்குங்கற வரைக்கும் சந்தோஷம் தான் !!).

நவநீ நாளைக்கு சென்னை புறப்படுறான்... சந்தோஷமாக.( பெண் தோழிகளோட காத்திருப்பு நிறைவடைகின்ற நாள் வந்தாச்சு !!)

ராம் அடுத்த வாரம் கெளம்பறான்.. அவனும் ஒரு இணைபுரியாத ஒரு சந்தோஷத்தோட தான் புறப்படுவான்-னு நெனைக்கறேன்.. புது நட்பை சந்திக்க போற மகிழ்ச்சி இருக்கத்தானே செய்யும் !!

எனக்கு ஆபீஸ்-ல இனிமேல் கொஞ்சம் கடியா தான் இருக்கும்.. "கடமையே கண்ணாயிரமாக" இருக்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகிடுவேன் !!

நவநீ / ராம் .... Good luck guyz ... Will miss you !

- செந்தில் !

அன்புள்ள அப்பா... வருக வருக !!

எனை தொடர்ந்து (என்று சொல்ல மாட்டேன் !!) என் அப்பாவும் தனது புதிய வலைப்பதிவை துவக்கி விட்டார் !! ஒரே வித்தியாசம் தான்... அவரு நல்லா எழுதுவாரு ... அவர ஒப்பிட்டு பாக்கும்போது நான் ரொம்பவே கத்துக்குட்டி தான் !!
என்னை இந்த உலகுக்கு அறிமுகப்படுத்தியவரை இந்த வலைப்பதிவு உலகுக்கு வரவேற்ப்பதில் பெருமைப்படுகிறேன்..
வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன் !!

என் அப்பாவின் வலைப்பதிவை இங்கே படிக்கலாம் !


கேட்டதை கொடுக்கும் தொழில்நுட்பம் !

Apr 1, 2009

என்னோட இந்த blog பற்றி என் நண்பன் கிட்டே சொன்னேன்... அப்போது அவன்.. 'நீங்க புதுசா ஒரு பதிவு போட்டிருகீங்கனு எனக்கு ஒரு mail வந்துதுன்னா இன்னும் வசதியா இருக்கும்.. நான் உடனே வந்து படிக்க சுலபமா இருக்கும்" னு சொன்னான்... கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் நான் வேற ஒரு blog படிச்சுட்டு இருக்கும்போது பாத்தா 'Feedburner' - ங்கற வசதியாள அதை செய்ய முடியும்-னு தெரிஞ்சுது.. ஏதோ சினிமா-ல சொல்லற வசனம் 'Technology has grown so much' தான் ஞாபகம் வந்துச்சு !!

இவள் அல்லவா தமிழச்சி

இன்னைல இருந்து கிறுக்க ஆரம்பிக்கலாம்னு பலமா முடிவு பண்ணி... இந்த வலைத்தளத்த உருவாக்கிட்டு பெருமையா என்னோட மனைவிக்கு போன் போட்டு "படிச்சு பாருன்னு" சொன்னேன்.. வெறும் 8 அல்லது 9 வரிகள் மட்டுமே இருந்த என்னோட முதல் கிறுக்கல படிக்கறதுக்கே அவளுக்கு போதும் போதும்னு ஆகிடுச்சு !! ஒவ்வொரு எழுத்தா கூட்டி கூட்டி அவ அத படிச்ச அழக கேட்ட உடனே எனக்கு சொல்லணும் தோணினது - " அடடா இவள் அல்லவா தமிழச்சி !! ".

முதல் கிறுக்கல் !

முட்டாள்கள் தினத்தன்று எனது முதல் கிறுக்கலை பதிவு செய்வது ஏதேச்சையாக நடந்த ஒரு நிகழ்வு தான் !!

கடந்த சில நாட்களாக Tamilish.com -இல் தொகுக்கப்பட்ட சில பல பதிவுகளை ரசித்து படித்து மகிழ்ந்த நான் - ஏன் நாமும் மனதில் தோன்றியவைகளை பதிவு செய்ய கூடாது என்ற எண்ணம் எழுந்தது .. விளைவு ... சரி நாமும் எழுதுவோம் .. மன்னிக்கவும் .. கிறுக்குவோம் , அந்த கொடுமையை மக்கள் அனுபவிக்கட்டும் என்று முடிவெடுத்துவிட்டேன்.

தொடரும் .

- செந்தில்.