Showing posts with label நன்றி. Show all posts
Showing posts with label நன்றி. Show all posts

நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...

Jun 11, 2009

என்னடா இவன்.... ரஜினி, விஜய் & சூர்யா- வுக்கெல்லாம் திடீர்னு நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா... ??

இவங்கெல்லாம் எனக்கு தினமும் செய்யற உதவிக்கு 'நன்றி'ன்னு ஒரு வார்த்தைல நன்றிக்கடன செலுத்த முடியாது..

என் மகனோட வயசு இப்போ பத்து மாசம்.. சார் இப்போதான் முழுமூச்சா வீடெங்கும் தவழறதும், எதையாவது புடிச்சு எழுந்திருக்கரதுமா பிசியா இருக்காரு... அவர பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடி நானும் என் மனைவியும் ஒரு சில சுத்துக்கள் இளைச்சாச்சு.. :)

இப்படி அவரு வீட்ல சும்மா இருக்கும்போது செய்யற குரும்புகளே ஏராளம்.. அப்படி இருக்கையில இவனுக்கு சாப்பாடு குடுக்கரதுங்கறது ஒரு பெரிய சவாலாவே இருக்கும்... ஒரு சில நாட்களுக்கு முன்னாடி, youtube -ல தமிழ் கார்ட்டூன் பாட்டுக்கள் போட்டா அதை விரும்பி பாக்க ஆரம்பிச்சான்.. ஒரு எடத்துல அமைதியா கொஞ்ச நேரம் அவன உக்கார வெக்கணும்னா பாட்டு போட்டு விட்டா போதும்... அப்படியே ஒரு சாந்த சொரூபியா மாறிடுவான்....

இப்பெல்லாம் அவருக்கு சாப்பாடு குடுக்கறது ரொம்ப சுலபமாகிடுச்சு.. சிவாஜி, வாரணம் ஆயிரம், வில்லு -னு எந்த படத்துல இருந்து பாட்டு போட்டாலும், அதை ரசிச்சிக்கிட்டே சாப்டுடறான்...

'செய்நன்றி கொன்ற மகற்கு' உய்வில்லைன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரில்லையா ... அதான் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடலாம்னு இந்த பதிவு...

மீண்டும்... நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி & சூர்யா !!