Showing posts with label Cricket. Show all posts
Showing posts with label Cricket. Show all posts

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வாங்கும் முயற்ச்சியில் 'சண்முகா ஸ்டோர்ஸ்' !!

May 11, 2009


இந்த IPL-ல சரியா விளையாடாத ஷாருக்கானின் 'கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை' வாங்கறதுக்கு "சண்முகா ஸ்டோர்ஸ்" குரூப் (அதாங்க.. நம்ம அண்ணாச்சியின் குழுமம்) முயற்சி செய்யப்போறதா நியூஸ் லீக் ஆகிருக்கு.. கீழ கொடுக்கப்பட்டிருக்கற நிபந்தனைகளுக்கு லலித் மோடியும் ஷாருக்கானும் ஒத்துக்கிட்டா இந்த டீல் முடிஞ்சிடுமாம்...

1. மொத்தல்ல இந்த 'ஜிகுஜிகு'-னு (கருப்பும் தங்க கலரும்) அடிக்கற கலர்ல இருக்கற டிரெஸ்ஸ மாத்தனும்.. நீல நிற சட்டையும் கருப்பு அல்லது பிரவுன் நிற பேண்டும் தான் போட்டு வெளையாடனும்... இந்த சீருடையும் (இதுக்கு உடை-னு சொல்லறதே ஓவர்... இதுல சீருடை...!!) சண்முகா ஸ்டோர்ஸ்-ல இருந்தே குடுத்துடுவோம்.. (அந்த மீட்டர் மூணே முக்கால் ரூவா காஸ்ட்லி துணில தச்சு..).... ஷூ , சாக்ஸ் எல்லாம் கொறஞ்ச விலைக்கு (Bata Showroom- இல் கிடைக்கறத விட குறைவா) சண்முகா ஸ்டோர்ஸ்லையே வாங்கிக்கலாம்..

2. இப்போ இருக்கற உலக பொருளாதாரத்த கருத்துல கொண்டு.. செலவுகள குறைக்கற முயற்சில...
  • ஒவ்வொருத்தருக்கும் தனித்தனியா ஹோட்டல் ரூம் புக் பண்றத நிறுத்திட்டு எல்லா வீரர்களும் ஒரே இடத்துல (நல்லா வசதியா !!) தங்கிக்கற மாதிரி கல்யாண மண்டபம் அல்லது எளிமண்டரி ஸ்கூல் க்லாஸ்ரூம் ஏற்பாடு செஞ்சு தரப்படும்... (சாப்பாடு பத்தி கவலைப்பட வேண்டாம்.. சண்முகா குரூப் காடேரிங்- -ல இருந்து உணவு வழங்கப்படும்...)
  • வெளையாடற கிரவண்டுக்கு போக வர சைக்கிள் வாங்கி (அல்லது வாடகைக்கு எடுத்து) கொடுக்கப்படும்.. உடற்பயிற்சியும் செஞ்ச மாதிரி ஆச்சு.. செலவும் குறையும்..

3. மேட்ச் ஆரம்பிக்கறதுக்கு ரெண்டு மணிநேரத்துக்கு மின்னாடியே எல்லா வீரர்களும் கிரவுண்டுக்கு வந்துடனும்.. வந்து சம்சா, வடை, போண்டா, பெப்சி, கோக், தண்ணி பாட்டில், இதெல்லாம் விக்கணும்.. ஒவ்வொருத்தரும் எவ்வளவு விக்கறாங்க-னு கணக்கு பாத்து அதன் அடிப்படையில சம்பளம் கொடுக்கப்படும்... (நெறியா விக்கறவங்களுக்கு கேப்டன் பதவி கூட போனஸ்-ஆ கொடுக்கப்படலாம்).


4. பாதுகாப்பு நடவடிக்கைகள கருத்துல கொண்டு, 'Z' பிரிவிலும் மேலான 'சண்முகா ஸ்டோர்ஸ்'-இன் செக்குரிட்டிகள் பணியமர்த்தப்படுவார்கள்.. லலித் மோடி விருப்பபட்டா கிரவுண்டுல இருக்கற மத்த செக்குரிடிகள எடுத்துட்டு இந்த செக்குரிட்டிகலயே பயன்படுத்திக்கலாம்..

கடைசியாக..

சரியா விளையாடாத வீரர்கள் தொடர் முடிஞ்ச பிறகு சென்னை-ல 'பிரம்மாண்டமாய்' இருக்கற 'சண்முகா ஸ்டோர்ஸ்'-ல ஒரு மாசம் வேலை செய்யணும்...

'Fake IPL Player' - Blog எழுதற வீரரும் யாருன்னு கண்டுபிடிச்சு , இந்த மாசம் முழுதும் ரங்கநாதன் தெரு கடையில வாசல்-ல கூட்டத்த கட்டுப்படுத்தற வேலை குடுக்கப்படும்..

டிஸ்கி : மேல சொல்லி இருக்கற எல்லா மேட்டரும் கற்பனையே (IPL, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லலித் மோடி, ஷாருக்கான் - தவிர) எந்த ஒரு நபரையோ 'குரூப்'-பயோ குறுப்பிட்டு சொல்லப்பட்டதல்ல.. சொல்லி இருக்கற விஷயம் யாரோடயாவது ஒத்துபோகுதுன்னா, அது ஏதேச்சையாக நடந்தது தான்.. அதற்க்கு நான் எந்த விதத்திலும் பொறுப்பல்ல.


மீண்டு(ம்) வருகிறதா சென்னை சூப்பர் கிங்க்ஸ் ?

May 4, 2009


இன்னிக்கு (04-May) ஆட்டத்தில இருந்த வேகம், எடுத்த முடிவுகள், அதுக்கு கெடைச்ச வெற்றி - எல்லாத்தையும் கூட்டி கழிச்சு பாத்தா.. 'வெற்றிப்பாதைக்கு மீண்டும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி ' வர்ற மாதிரியே தெரியுது.. பொறுத்திருந்து பாப்போம், இன்னும் நெறையா ஆட்டங்கள் பாக்கி இருக்கு... நம்ம பசங்க என்ன செய்ய போறாங்கன்னு பாக்கலாம்...

சென்னை அணியோட (தற்போதைய) பலங்கள் -

1. நல்ல பார்ம்-ல இருக்கற பேட்ஸ்மென்கள் -
  • ஹய்டேன் .. தல பட்டய கெளப்பிகிட்டு இருக்கு.. தொடர்ந்து கெளப்புமா ??
  • ரெய்னா .. இள ரத்தம் .. ஒரே சிக்ஸர் , போர்னு தான் வேலாசிகிட்டு இருக்காரு.. அதிரடி தொடர்ந்தா அருமை..
  • பத்ரி & விஜய் .. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் !! நிதானமா தெரிஞ்சாலும், consistent -ஆ ரன் அடிச்சா போதும்!!..
  • தோனி.. ஒரு வழியா அதிரடி ஆட்டம் மறுபடியும் கொஞ்சம் 'தல' காட்டுது.. இன்னும் கொஞ்சம் அதிரடி காட்டினா.. பழைய தோனியா வரணும் (சத்ரியன் ஸ்டைல்-ல!)

2. எதிரணிக்கு நெருக்கடி கொடுக்கும் பவுலர்கள் -

  • பாலாஜி - தங்கத்தமிழன்.. இப்போ வரைக்கும் (இன்னிக்கித்த மேட்ச் தவிர !) நல்லா தான் வீசிக்கிட்டு இருக்காரு.. அய்யா.. போன வருஷம் IPL final ஞாபகத்துல வெச்சுகிட்டு பந்து வீசினா சரி...
  • முரளி.. அட்டகாசம்.. அருமை.. வேற என்ன சொல்ல..
  • ஜகதி / தியாகி .. புதிய கண்டுபிடிப்புகள்.. underdogs -னு சொல்லலாம்.. யாரும் எதிர்பாக்களை இவ்ளோ நல்லா விளையாடுவாங்கன்னு .. சபாஷ்... தொடரட்டும் !!
  • மோர்க்கேல் / ஜாகோப் ஓரம் - ரெண்டு பேரும் திறமைசாலிகள்தான் .. இன்னும் நல்லா வெளையாடலாம்..

இப்போ points table-ல 9 points எடுத்து முதல் எடத்துல இருந்தாலும்.. இது நாளைக்கு வரைக்கும் தான்.. பஞ்சாப் , டெல்லி & ராஜஸ்தான் அணிகள் நாளைக்கு ஆட்டத்தோட முடிவுல புள்ளிகள் அதிகமாகி மேல வரலாம்.. மும்பை அணி புதன்கிழமை ஆட்டத்துல ஜெயிச்சா அவுங்களும் மேல வந்துடுவாங்க...

ஆகமொத்தம் ... தொடர்ந்து நல்லா விளையாடினா மட்டும் தான் சென்னை தன்னோட எடத்த தக்க வெச்சுக்க முடியும்...

நல்லா விளையாடுமா ? ஹய்டேன், ரெய்னா, தோனி, முரளி, பாலாஜி, இவங்களோட இப்போ நல்லா விளையாடிட்டு இருக்கற ஜகதி, தியாகி, பத்ரி & விஜய் எல்லாரும் தோள் குடுத்தா ... வெற்றி நிச்சயம் !! (ஹ்ம்ம்.. சொல்லறதுக்கு நல்லாத்தான் இருக்கு... செய்வாங்களா??)