மகேந்திர சிங் தோனி-இன் மர்மமான முயற்சிகள் !

Apr 30, 2009

இந்த ஆண்டின் IPL -இல் தோனி எடுக்கும் ஒரு சில முடிவுகள் / முயற்சிகள் சற்றே தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது !

சென்னை சூப்பர் கிங்க்ஸ்-இன் முதல் போட்டியில் தமிழகத்தின் இளம் வீரர் 'ரவிச்சந்த்ரா அஷ்வின்' டீம்-இல் இருந்தார்.. [ இந்திய அணிக்காக கண்டறியப்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களில் (Future Probables) இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது ]. அணியில் இடம்பெற்றாலும் இவருக்கு ஒரு ஓவர் கூட பந்து வீச வாய்ப்பு வழங்கவில்லை அணித்தலைவர் தோனி !! காரணம்.. தெரியவில்லை.. சரி.. முதல் போட்டியில் அதிக ரிஸ்க் எடுக்க வேண்டாம் என்று எண்ணினாரோ என நினைதேன்..

இதேபோல நேற்று (30 April) நடைபெற்ற போட்டியில் ஜகதி (Shadab Jakati) என்ற பௌலர் அணியில் இடம்பெற்று ஒரு ஓவர் கூட வீசாமல் இருந்தார் !!

இது போல ஒரு பண்டுவீச்சாலரை அணியில் வைத்துக்கொண்டு உபயோகிக்காமல் இருப்பதற்கு பதிலாக ஒரு ஆல்ரௌண்டர் -யோ அல்லது கூடுதலாக ஒரு பாட்ஸ்மேன் -யோ களமிறக்கி இருக்கலாமே ?

IPL -இல் எடுக்கப்படும் ஆச்சர்யமான முயற்சிகளில் இதுவும் ஒன்றோ ??

பி.கு : யாருக்கேனும் இந்த முயற்சிக்கான காரணம் தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்களேன் !4 comments:

hassan said...

தெரியாது நண்பா...


ஹசன் ராஜா

செந்தில்குமார் said...

@ஹசன் :
வந்தமைக்கும் (மற்றொரு பதிவில் வாழ்த்தியமைக்கும்) மிக்க நன்றி !

Kanna said...

// இந்த ஆண்டின் IPL -இல் தோனி எடுக்கும் ஒரு சில முடிவுகள் / முயற்சிகள் சற்றே தெளிவற்றதாகவும் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கிறது !//

அவரே லட்சுமிராய் வரலன்னு சோகத்துல இருக்கார்...நீங்க வேற

செந்தில்குமார் said...

@ கண்ணா :

அட.. லட்சுமிராய் வராதது தான் பிரச்சனை-னா பேசாம போன வருஷம் IPL -ல செஞ்ச மாதிரி "Brand Ambassadors"-ங்கற பேர்ல அவங்கள South Africa அனுப்பிடலாமே... சென்னை சூப்பர் கிங்க்ஸ் வெற்றிக்கு அவங்க தான் ஒரு 'கிரியா ஊக்கி' - ஆ (அதாங்க catalyst !!) இருப்பாங்க-ன்னா அதையும் செஞ்சு தானே ஆகணும் !!