விண்டோஸ் - பயனுள்ள 'ரன் கமாண்ட்ஸ்' (Run Commands) - பாகம் 1

May 3, 2009

விண்டோஸ்-இல இருக்கற 'Run'-ங்கற ஆப்ஷன் பத்தி உங்க எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும்-னு நெனைக்கறேன்.. (Start Menu -> Run மூலமாகவோ அல்லது Windows Key-உடன் 'R' பட்டனை அழுத்தலாம்)
இந்த 'ரன்' மூலமா ஒரு சில விஷயங்கள வேகமா செய்ய முடியும்ங்கறது தான் அந்த வசதியோட சிறப்பு.
நான் சமீபத்துல தெரிஞ்சிக்கிட்ட விஷயத்த சொல்லறேன்... நான் தெரிஞ்சுக்கிட்ட 'On Screen Keyboard' -ங்கற (சுருக்கமாக OSK) விஷயத்த பகிர்ந்துக்கறேன்..
வீட்ல கம்ப்யூட்டர்-ல கொஞ்சம் தள்ளி உக்காந்துகிட்டு எதாவது DVD அல்லது Internet TV பாத்துக்கிட்டு இருப்பேன்.. Wireless Mouse வேச்சிருக்கறதாலே சேனல் மாத்தறது மாதிரி (type பண்ண தேவை இல்லாத) வேலைகள தூரத்துல இருந்தே செஞ்சுக்கலாம்.. ஆனா அந்த சமயத்துல எதாவது டைப் பண்ணனும்னா (Web page address / password..etc) மறுபடியும் எழுந்து கம்ப்யூட்டர்-க்கு போயிட்டு தான் டைப் பண்ணனும்.. (அதுக்கு சோம்பேரித்தனமா இருக்கும் தான் !!) நேத்திக்கு தான் இந்த OSK -வை பயன்படுத்தலாம்-ங்கற யோசனை வந்துச்சு...
வழிகள் இதோ...
1. Run விண்டோ-வில் 'OSK' என்று டைப் செஞ்சா (கீழே இருப்பது போல ..)

இந்த மாதிரி ஒரு விண்டோ-ல (கீழே இருப்பது போல ..) ஒரு கீபோர்டு வரும்.. இந்த கீபோர்டை எந்த application-ல வேணும்னாலும் டைப் பண்ணலாம்...
2. Desktop-ல இந்த OSK-க்கு ஒரு shortcut செஞ்சு வெச்சுக்கலாம்... இது மேல சொன்னத விட சிறந்த வழி...

அவ்ளோதான் ... இனிமேல் நீங்க உங்க wireless mouse-ஐ மட்டும் வெச்சுகிட்டு எங்கிருந்து வேணாலும் டைப் பண்ணலாம்..

பி.கு: Wireless Mouse வாங்கத்தெரிஞ்ச புத்திசாலிக்கு ஒரு Wireless Keyboard வாங்க முடியலையோ-னு ஒரு சிலர் கேக்கறது புரியுது.. எங்க வீட்ல குடுத்த பட்ஜெட்-கு அத மட்டும் தான் வாங்க முடிஞ்சுது.. அதனாலதான் இப்படி குறுக்கு வழிகள் கண்டு புடிக்க வேண்டிய கட்டாயம் :)











2 comments:

Dr.V.Gnanaprakasam said...

Very useful information. please continue to write such tips for use of others

செந்தில்குமார் said...

@ Dr.V.Gnanaprakasam,

Thank you Sir.. Will do !