காட்பரி எக்ளைர்ஸ்- இன் புதிய விளம்பரம்

May 5, 2009

இன்னிக்கு சன் டிவி பாத்துகிட்டு இருக்கும்போது 'Cadbury Eclairs' -ஓட புது ad போட்டாங்க...
(யாராவது வீடியோ லிங்க் upload பண்ணி இருக்காங்களான்னு தேடிப்பாத்தேன் ... கெடைக்கலே..)

அந்த விளம்பரம்...

வாயோட ஓரத்துல பட்டாசு திரி மாதிரி எரியுது.. இது மாதிரி ஒரு நாலஞ்சு பேரோட வாயுல அது எரியறதே காட்டறாங்க.. அப்புறம் அது வெடிக்குது... தலை அப்படியே வெடிச்சு சாக்லேட்-ஆ செதருது...
விளம்பர யுக்தி-ல creative/innovative -ஆ யோசிக்கரதுங்கறது ஞாயம் தான்.. அதுக்காக இப்படியா... புதுமையா இருந்தாலும் அத பாக்கும்போது ஒரு விதமான அருவருப்பு / அதிர்ச்சி வரத்தானே செய்யுது.. பெரியவங்கள விடுங்க.. வீட்ல குட்டீஸ் டிவி பாக்கும்போது இந்த விளம்பரம் வந்தா... பாக்கற அவங்களோட மனநிலை எப்படி இருக்கும் ?
பார்க்கறவங்கள கவரனும்கறதுக்காக இப்படி ஒரு முயற்சி தேவையா ? Vodafone -ஓட சமீபத்திய விளம்பரம் (வெள்ளை நேரத்துல ஒரு ஜீவன் வருமே...) கூட தான் வித்யாசமா இருக்கு... ஆனா அத பாத்து ரசிக்க முடியுது...
விளம்பர படம் எடுக்கறவங்க கொஞ்சம் யோசிச்சு.. ஆங்கிலத்துல 'Target audiance' -னு சொல்லுவாங்களே... அப்படி, அத யாரெல்லாம் பாக்கறாங்க-னு சிந்திச்சு பண்ணினா நல்லா இருக்கும்...


டிஸ்கி : இது என்னோட கருத்து ... அவ்ளோ தான்.. சில பேருக்கு இந்த விளம்பரம் பிடிச்சிருக்கலாம்... அவங்களோட என்னத்த / விருப்பத்த குறை சொல்ல அல்ல..0 comments: