வருகிறேன் சென்னை !!

Jun 16, 2009


ருபத்தி இரண்டு மாதங்களாகிவிட்டது சென்னையை விட்டு இங்கு வந்து... (ங்கொய்யால எவ்ளோ நாளாகிப்போச்சு)

நட்புகள், உறவுகள், சுற்றித்திரிந்த தெருக்கள் (சைட் அடிச்ச ஃபிகர்கள விட்டுட்டியேன்னு மனசாட்சி எக்கோ குடுக்குது...), வாரந்தோறும் விளையாடிய 'சோமசுந்தரம் கிரவுண்டு', 'நெருங்கிப்'பழகிய தி.நகர் கடைகள் (யப்பா.. எம்பூட்டு கூட்டம்), சில்லென்ற கடற்கரை காற்று இவையனைத்தையும் துறந்து இங்கு வரவேண்டிய அலுவலக கட்டாயம்..

ஒருவழியாக வந்த வேலை இனிதே முடிவடைய (விடுவோமா, முடிச்சுட்டோம்ல!!), இந்த மாத இறுதியில் சென்னை திரும்ப முடிவாயிற்று !! ஆஹா... என்ன ஒரு நிறைவான உணர்வு அது (வெய்யிலுக்கு கும்முன்னு ஜிகர்தண்டா குடிச்ச மாதிரி !!).. மீண்டும் 'நம்ம' ஊருக்கு திரும்பப்போகிறோம் என்கிற ஆனந்தம் மனதெங்கும் பரவிக்கிடக்கிறது.... கடந்த சில நாட்களாகவே வீட்டில் மனைவி 'இன்னும் பதினெட்டு நாட்கள் தான்.. இன்னும் பதினேழு நாட்கள் தான்' என்று (இந்த உலகக்கோப்பை போட்டிகளுக்கு குடுக்கற கவுன்ட்டவுன் மாதிரி) பூரித்துக்கொண்டிருக்கிறாள்..

மெரிக்கா - தொழில் முறையில் மட்டுமல்லாது தனிப்பட்ட முறையிலும் (அதாங்க பர்சனல் லைப் - அத 'டேமில் '-ல சொல்ல தெரியலே.. :)) ) எனக்கு நன்றாகவே வாழ்வளித்தது.. மிகப்பெரிய பதவி உயர்வையும் தந்திருக்கிறது. ஆமாம், 'அப்பா' என்ற பதவி உயர்வு கிடைத்ததும் இந்த 22 மாதங்களுக்குள்ளாகத்தான். ஒப்பிட முடியாத, மட்டற்ற மகிழ்ச்சியை தந்த அனுபவம் அது !!

ஆக, ஜூன் 29 -ஆம் தேதியன்று, மிகுந்த மன நிறைவோடு அமெரிக்காவிற்கு விடை கொடுத்துவிட்டு, சென்னையை நோக்கி எனது பயணத்தை தொடங்கப்போகிறேன்..

ருகிறேன் சென்னை, வாரி அணைக்கக் காத்திருக்கும் உறவுகளும் நட்புக்களுக்கும் எனது வாயார, மனமார நன்றிகளைக் கூறி விடுவேன்.... ஆனால், எனை ஓய்வின்றித் தாங்கி, பிரியா விடைகொடுத்தனுப்பிய தாய்மண்ணே, உனக்கெப்படி நன்றி சொல்வேன் ? உன்னுடன் மீண்டும் சேர ஓடோடி வருகிறேன். வருகிறேன் சென்னை... !!12 comments:

sakthi said...

Welcome to great india....

செந்தில்குமார் said...

@சக்தி,

வாங்க மேடம்.. நன்றி நன்றி !!

Suresh said...

வாங்க வாங்க ...
ஆயிரம் லட்சங்கள் புரண்டாலும் சென்னை வெயிலில் மண்டை புரட்டும் சுகமே சுகம்..

கண்டிப்பா மீட் செய்வோ நண்பா :-)

வம்பு விஜய் said...

அண்ணே, நான் பதிவுலகத்துக்கு புதுசு ...

உங்க பதிவு அழகு, தமிழர்ஸில் வோட்டும் போட்டாச்சு

அப்படியே நம்ம பதிவுக்கும் வந்து பார்த்து விட்டு !!!

ஓட்ட மறக்கமா தமிழர்ஸில் குத்திட்டு போங்க உங்களுக்கு புண்ணியமா போகும்

செந்தில்குமார் said...

@ சுரேஷ்,

உண்மை தான் நண்பா.. நம்ம ஊரு நம்ம ஊரு தான் !!
அண்ணா சாலை வெய்யில்ல மண்டை காஞ்சு வண்டி ஓட்டிட்டு போனாலும், அதுவும் ஒரு சுகம் தான் !!

செந்தில்குமார் said...

@ வம்பு விஜய்,

வோட்டும் போட்டுட்டேன் பின்னூட்டமும் போட்டுட்டேன்... கலக்குங்க விஜய் !!

விக்னேஷ்வரி said...

Welcome to India Senthil.

உங்கள் குழந்தையை நீங்கள் இப்போது தான் முதல் முறை பார்க்கப் போகிறீர்கள் என நினைக்கிறேன். வாழ்த்துக்கள்.

Sukumar Swaminathan said...

அட வாங்க வாங்க தல ..... சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது.... இங்க ஜிகர் தன்டாவே ஆவியாகி போற அளவு வெயில் கொளுத்துது எசமான் ..... பாத்து வாங்க....

(அப்புறம் மென்பொருள் அமைப்பு கட்டுமானம்னா என்னங்க.... கொஞ்சம் புரியிற மாதிரி தமிழ்ல சொல்லுங்க..)

செந்தில்குமார் said...

@ விக்னேஷ்வரி,

வருகைக்கும், பின்னூட்டத்துக்கும் நன்றி தோழி !

குழந்தை இங்கே எங்களோட தாங்க இருக்கான். அவன் US -ல தாங்க பிறந்தான், அவனோட தாத்தா பாட்டி எல்லாரும் தான் அவன பாக்கறதுக்கு ரொம்ப ஆவலா இருக்காங்க... :)

செந்தில்குமார் said...

@ வலைமனை சுகுமார்,

தல.. முதல் முறையா நம்ம பக்கத்துக்கு வந்திருக்கீங்க... நன்றி நன்றி !!

என்னதான் வெய்யில் கொளுத்தினாலும், ஐஸ் கட்டியே அரை நொடியில ஆவி ஆனாலும், இந்த பாவி மனசு சென்னைய தாங்க விரும்புது :))

(ஏதோ கவிஜ எழுத முயற்சி செய்யற மாதிரி தெரியுதே.... !!)

அப்புறம்... மென்பொருள் அமைப்பு கட்டுமானர் -னா தமிழ்ல 'சாப்டுவேர் ஆர்க்கிடெக்ட்' -னு சொல்லுவாங்களே அதாங்க...

Sukumar Swaminathan said...

// அப்புறம்... மென்பொருள் அமைப்பு கட்டுமானர் -னா தமிழ்ல 'சாப்டுவேர் ஆர்க்கிடெக்ட்' -னு சொல்லுவாங்களே அதாங்க... //

இப்படி விவரமா சொன்னீங்கன்னா சரி....
அப்புறம் சிங்கார சென்னையில் சந்திப்போம்... நன்றி....

செந்தில்குமார் said...

@ வலைமனை சுகுமார் ,

கண்டிப்பா சந்திப்போம் தல... ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கிறேன் !