நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி, சூர்யா...

Jun 11, 2009

என்னடா இவன்.... ரஜினி, விஜய் & சூர்யா- வுக்கெல்லாம் திடீர்னு நன்றி சொல்லறான்னு பாக்கறீங்களா... ??

இவங்கெல்லாம் எனக்கு தினமும் செய்யற உதவிக்கு 'நன்றி'ன்னு ஒரு வார்த்தைல நன்றிக்கடன செலுத்த முடியாது..

என் மகனோட வயசு இப்போ பத்து மாசம்.. சார் இப்போதான் முழுமூச்சா வீடெங்கும் தவழறதும், எதையாவது புடிச்சு எழுந்திருக்கரதுமா பிசியா இருக்காரு... அவர பின்தொடர்ந்து எல்லா இடங்களுக்கும் ஓடி ஓடி நானும் என் மனைவியும் ஒரு சில சுத்துக்கள் இளைச்சாச்சு.. :)

இப்படி அவரு வீட்ல சும்மா இருக்கும்போது செய்யற குரும்புகளே ஏராளம்.. அப்படி இருக்கையில இவனுக்கு சாப்பாடு குடுக்கரதுங்கறது ஒரு பெரிய சவாலாவே இருக்கும்... ஒரு சில நாட்களுக்கு முன்னாடி, youtube -ல தமிழ் கார்ட்டூன் பாட்டுக்கள் போட்டா அதை விரும்பி பாக்க ஆரம்பிச்சான்.. ஒரு எடத்துல அமைதியா கொஞ்ச நேரம் அவன உக்கார வெக்கணும்னா பாட்டு போட்டு விட்டா போதும்... அப்படியே ஒரு சாந்த சொரூபியா மாறிடுவான்....

இப்பெல்லாம் அவருக்கு சாப்பாடு குடுக்கறது ரொம்ப சுலபமாகிடுச்சு.. சிவாஜி, வாரணம் ஆயிரம், வில்லு -னு எந்த படத்துல இருந்து பாட்டு போட்டாலும், அதை ரசிச்சிக்கிட்டே சாப்டுடறான்...

'செய்நன்றி கொன்ற மகற்கு' உய்வில்லைன்னு வள்ளுவரே சொல்லி இருக்காரில்லையா ... அதான் இவங்க எல்லாருக்கும் நன்றி சொல்லிடலாம்னு இந்த பதிவு...

மீண்டும்... நன்றி சூப்பர் ஸ்டார், இளைய தளபதி & சூர்யா !!


10 comments:

Anonymous said...

அன்புள்ள செந்தில்குமார் அவர்களே!

இவ்வார தமிழர் பட்டையை இணைத்தற்க்கு மிக்க நன்றி

உங்களது பிளாக் பெயரையை இவ்வார பட்டையை இணைத்தவர்கள் பட்டியலில் சேர்த்து விட்டோம்

உங்கள் ஆதரவு, அன்பு மற்றும் தமிழுடன்
தமிழர்ஸ்.காம்

தமிழினி said...

உங்கள் வலைத்தளத்தை மெருகூட்டுவதற்காக இப்போது தமிழ்10 தளம் தமிழ்10 -டூல்ஸ் என்னும் பெயரில் பல வசதிகளை இணைத்துள்ளது

இதில் குறிப்பாக
1-இணையதளத்தில் முதன் முறையாக தமிழில் hits counter
2-புத்தம்புதிய அழகிய templates
3-கண்ணை கவரும் gadgets
ஒரு முறை வந்து பாருங்கள்
முகவரி http://tamil10.com/tools.html

கலையரசன் said...

மச்சி சோக்கா எலுதுறியே நீ..
மயின்டுல வச்சிகிறேன்!
அப்பாலிகா கண்டுகறேன்..

இப்ப பாலோ பண்றேன்..

பிரியமுடன்.........வசந்த் said...

வித்த்யாசமான நன்றிகள்

செந்தில்குமார் said...

@ கலையரசன்,

மச்சி, நன்றி நன்றி !!
பாலோ பண்றேன்னு சொல்லிட்டே.. .இனிமேலாவது நான் ஒழுங்கா எழுத ஆரம்பிக்கறேன் :)

செந்தில்குமார் said...

@ பிரியமுடன்.........வசந்த்.

அண்ணா , வாங்கனா வாங்கனா...

வந்ததுக்கு நன்றி, பின்னூட்டம் போட்டதுக்கு நன்றி... ஆகா எவ்வளோ நன்றிகள் சொல்லியாச்சு... !!

தல, அடுத்த 'ஐடியா மணி' கேள்விகளுக்காக வெயிட்டிங்.... சீக்கிரமா போடுறீங்களா இல்ல நான் போடட்டா ??? :))

Uma Kandaswamy said...

பவன் சாப்பிட அயன் பாட்டு தான்.. சூர்யா பாட்டு போடுங்க-ன்னு கேட்டு, அப்புறம் ஓயாயியே-ன்னு கூடப் பாடி...
சூர்யாவுக்கு தினமும் விக்கி விக்கியே தல சுத்திறும்..

செந்தில்குமார் said...

@ உமா,

உண்மை தான்... :)

நீண்ட நாட்களுக்குப்பிறகு ஒரு பின்னூட்டம்... நன்றி அக்கா !!

Uma Kandaswamy said...

இப்படியாவது அக்கான்னு கூப்பிடற... ஹ்ம்...

மாற்றுப்பார்வை said...

அருமை